சென்னை: நடிகை த்ரிஷா சினிமாத் துறை மீது தனக்கு உள்ள பற்றை வெளிப்படுத்த தனது முதுகில் கேமராவை பச்சை குத்தியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக உள்ளவர் த்ரிஷா. நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ இன்றும் அதே போன்று தான் அழகாகவும், சிக்கென்றும் உள்ளார்.
தனது சொந்த வாழ்க்கையில் தந்தையின் மரணம், திருமணம் நின்றது ஆகியவை நடந்தாலும் பணியில் கவனம் செலுத்த தவறாதவர். த்ரிஷாவுக்கு பச்சை குத்திக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும்.05-1451974712-trisha-finding-nemo-tattoo1-600
மார்பு
த்ரிஷா தனது மார்பு பகுதியில் நீமோ என்ற மீனின் உருவத்தை பச்சைக் குத்திக் கொண்டார். அவர் பச்சைக் குத்திக் கொண்டபோது அது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.
கையில்
மார்பில் மீனை பச்சைக் குத்திய த்ரிஷா தனது கையில் ரிஷப ராசியின் அடையாளத்தை பச்சைக் குத்தினார்.
முதுகு
ஏற்கனவே இரண்டு பச்சை குத்திக் கொண்ட த்ரிஷா தற்போது மூன்றாவது முறையாக பச்சை குத்தியுள்ளார். முதுகில் வீடியோ கேமராவை பச்சைக் குத்தியுள்ளார்.
கேமரா
மனதில் உள்ளதை தோலில் காட்டுங்கள், இதோ 3வது டாட்டூ #lovemyjob #moviesareforever என தனது டாட்டூ பற்றி ட்வீட் செய்துள்ளார் த்ரிஷா.
Share.
Leave A Reply

Exit mobile version