ஈரா­னா­னது தனது ஏவு­க­ணை­க­ளுக்­கான நிலத்­துக்­கு கீ­ழான புதிய களஞ்­சி­ய­சா­லை கள் குறித்து அறி­வித்­துள்­ளது.

மேற்­­படி நிலத்­துக்­கு கீ­ழான களஞ்­சி­ய­சா­லையில் அணு ஆயு­தங்­களை ஏந்திச் செல்­லக்­கூ­டிய வல்­ல­மையைக் கொண்ட ஏவு­க­ணைகள் உள்­ள­டங்­க­லான ஏவு­க­ணைகள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தெரி விக்கப்­ப­டு­கி­றது.

மேற்­படி புதிய களஞ்­சி­ய­சாலை தொடர் பில் அந்­நாட்டு தொலைக்­காட்சி செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளது.

ob_f8d652_l-iran-menace-sa-television-d-etat-mசவூதி அரே­பி­யாவில் ஷியா மத­கு­ரு­ ஒரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டமை தொடர்பில் ஈரா­னிய ஜனாதிபதி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலை­யி­லேயே இந்தத் தகவல் வெளியா­கி­யுள்­ளது.

மேற்­படி களஞ்­சி­ய­சா­லை­யா­னது மலை­க­ளுக்கு கீழாக அமைந்­துள்­ளது.

ஈரா­னிய புரட்­சி­கர காவல்­ப­டையால் செயற்­ப­டுத்­தப்­படும் இந்த களஞ்­சி­ய­சா­லையை அந்­நாட்டு பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் அலி லாரி­ஜானி ஆரம்பித்து வைத் துள்ளார்.

ஈரானின் இந்த களஞ்­சி­ய­சாலை தொடர் ­பான தொலைக்­காட்சி ஒளிப­ரப்புக் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கையில், இது 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை மீறுவதாக உள்ளதென தெரி வித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version