ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 14 மாத பெண் குழந்தை காயம் இன்றி உயிர் பிழைத்துள்ளது.

பிரேசிலில் உள்ள சியாரா மாநில தலைநகர் போர்டாலெசாவில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து 14 மாத பெண் குழந்தை தரையில் வந்து விழுந்தது.

 

மாடியில் இருந்து விழுகையில் குழந்தையின் முகம் தான் தரையில் முதலில் பட்டது.

தரையில் விழுந்த குழந்தை சில நொடிகளில் அதுவாக எழுந்தது. அதன் பிறகு ஒவ்வொருவராக ஓடி வந்தனர். இதற்கிடையே தாய் வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தும் குழந்தை சிறு காயம் இன்றி உயிர் பிழைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. குழந்தை விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version