கொழும்பு , தெமட்டகொட பிரதேசத்தில் அண்மையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட தாய் மற்றும் மகளை கார் ஒன்று மோதியதில் அதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தமையே பதற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது.
15 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய காரில் மோதியே 47 வயதான தாய் மற்றும் அவரது 10 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து காரை செலுத்திய சிறுவன் அங்கிருந்து தப்பிய நிலையில் , மேலும் அந்நபரை கைதுசெய்யுமாறு கோரியும் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கூடியதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்ட து.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
வீரசிங்க ஆரச்சிலாகே அனுலா மற்றும் அவரது மகள் சமாதி ரஸ்மிகாஆகியோர் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிரதேசத்தில்மஞ்சட்கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது வேகமாக வந்த காரொன்று அவர்களை மோதியுள்ளது. இதன்போது அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு–8 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர்கள். சம்பவத்தில் இவர்களை மோதிய 15 வயது சிறுவன் தப்பிச்சென்றுள்ளதுடன், அவருக்கு பதிலாக அவரது உறவினரொருவர் பொலிஸில் சரணடைய வந்துள்ளார்.
இதனையடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தி இருவர் உயிரிழக்க காரணமாக அமைந்த நபருக்கு பதிலாக வேறொருவர் பொலிஸில் சரணடைய வந்தமையையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையம் முன் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட த் தொடங்கினர்.
எனினும் அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள் பொதுமக்களை அமைதிப்படுத்தியதுடன் , உண்மையான சந்தேகநபரை கைதுசெய்வதாகவும் உறுதியளித்தனர்.
இதன்பின்னர், விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் வாகனத்தையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் சம்பவத்தின் போது சிறுவனின் தாயாரும் காரில் இருந்துள்ளார். அவரே காரின் சாவியை சிறுவனுக்கு வழங்கி , வாகனம் செலுத்தவும் அனுமதித்துள்ளார்.
இந் நிலையில்குறித்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும்போது அங்கிருந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களை தாக்க முற்பட்டதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த தாக கூறப்படும் ஒருவர் , இரு வாகன ங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு செல்ல முற்ப ட்ட தாகவும் அதன் காரணமாகவே விபத்து ஏற்ப ட்ட தாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இவ்விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மூத்தமகள் தற்போது அனாதையாக்கப்பட்டுள்ளார். தனது தந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் தாயும், சகோதரியும் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனிமையாக்கப்பட்டுள்ளார்.