இந்தியாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் கும்பமேளாவில் நீராடியுள்ளார் தங்க பாபா.
உத்தரகாண்ட்டின் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வருகிறது.
இதில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் பக்தர்கள் கங்கையில் நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் 15.5 கிலோ தங்க நகைகளுடன் அதாவது ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து சுதிர்குமார் மக்கட் என்ற சாது நீராடியுள்ளார்.
டெல்லியில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சுதிர்குமார் கை, கால்கள் என எல்லா விரல்களிலுமே நகைகளை அணிந்துள்ளார், கையில் கட்டியுள்ள வைரகடிகாரத்தின் மதிப்பு மட்டும் ரூ.27 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது சீடர்களோ, எங்கள் குரு உலகின் மிக மதிப்புள்ள விலை உயர்ந்த தங்கத்தை போன்றவர் என்று கூறியுள்ளனர்.