child-abused-bitten-by-father-6தனது சிறிய குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி குழந்தையின் முகத்தைக் கடித்து துன்புறுத்திய குழந்தையின் தந்தையைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.


வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய எழுவான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (18) இரவு குறித்த சந்தேகநபர் தனது இரண்டு வயதும் நான்கு மாதங்களும் கொண்ட மகளை அக்குழந்தை தூங்கிக் கொண்டிருந்த வேளை அடித்து துன்புறுத்தியுள்ளதுடன் முகத்தைக் கடித்தும் காயப்படுத்தியதாக குழந்தையின் தாய் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சந்தேகநபர் இதற்கு முன்னரும் தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியதற்கான வடுக்கள் குழந்தையின் மேனியில் காணப்படுவதாகவும், என்ன காரணத்திற்காக இவ்வாறு தனது குழந்தையை தந்தை துன்புறுத்தினார் என்ற விபரத்தை குழந்தையின் தாய் மறைக்க முயற்சிப்பதாகத் தெரிய வருகின்றது.
குறித்த குழந்தையை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர், நேற்று (19) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share.
Leave A Reply

Exit mobile version