கணவர் முன்­னி­லையில் மனை­வியின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு வந்த அழைப்­பிற்கு மனைவி பதி­ல­ளிக்­காமல் கழி­வ­றைக்குச் சென்று தொலை­பே­சியில் உரை­யா­டியதால் மனைவி மீது சந்­தேகம் கொண்ட கணவர், அவரது தலை­மு­டியை முழு­மை­யாக அறுத்தெறிந்த சம்­பவம் ஒன்று மத்­து­ரட்ட பொலிஸ் பிர­தே­சத்தில் நிகழ்ந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; குடும்பப் பெண் ஒருவர் தீக் காயங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள தன் 4 வயது மகளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து தன் தாயா­ரையும் மக­ள­ருகில் தங்க வைத்­து­விட்டு வீட்­டிற்கு ஓடோடி வந்­துள்ளார்.

வீட்­டிற்கு வந்­த­போது இரா­ணு­வத்தில் சேவை­யாற்றும் தன் கணவர் வீட்­டிற்கு வந்­தி­ருப்­பதை அறிந்து கொண்டார்.

வீட்டில் கண­வ­ருடன் கதைத்துக் கொண்­டி­ருக்­கும்­போது மனை­வியின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு அழைப்பு வந்­துள்­ளது.

அழைப்­பினை பார்­வை­யிட்ட மனைவி அவ்­வி­டத்தில் பதில் பேசாமல் கழி­வ­றைக்குச் சென்று கத­வினை மூடிக் கொண்டு அதிக நேரம் உரை­யாடிக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இதனை அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த கணவர் மனைவி வெளியில் வந்­த­துடன் அவர் மீது சந்­தே­கம்­கொண்டு இவ்­வி­டயம் தொடர்­பாக வின­வி­ய­துடன் அந்­நபர் யார் என கேள்­வியும் எழுப்­பி­யுள்ளார்.

அந்­நபர் இங்கு கிராம பாதை நிர்­மாண வேலை­க­ளின்­போது அறி­மு­க­மா­னவர் என மனைவி தெரி­வித்­துள்ளார்.

எனினும் கணவர் அதனை நம்­பாமல் கேள்­விக்கு மேல் கேள்வி எழுப்­பி­யதால் இரு­வக்குமிடையே வாக்குவாதம் ஏற்­பட்ட நிலையில் ஆத்­திரம் கொண்டு மனை­வியின் தலை­மு­டி­யைப் பிடித்து முழு­மை­யாகக் கத்­த­ரித்­துள்ளார்.

இது தொடர்­பாக மனைவி மத்­து­ரட்ட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு கண­வரை கைது செய்து வலப்­பனை நீதி­மன்­றத்தில் நீதிவான் எச்.எம். செரீப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் சந்தேக நபரை 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version