பிரித்தானிய பெண்களை திருமணம் செய்துகொண்டு அந்நாட்டில் குடியேற முற்படும் ஆண்களிடம் அவர்களின் மனைவியின் பிரா அளவு மற்றும் மனைவியின் உள்ளாடை நிறம் ஆகியன குறித்தும் விசாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையாக திருமணம் செய்யாமல், பிரித்தானிய பெண்களை திருமணம் செய்துகொண்டதாக அதிகாரிகளை நம்பவைத்து மோசடியான முறையில் குடியுரிமை பெறும் முயற்சிகளை முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.

ஸ்கொட்லாந்திலுள்ள குடிவரவு நிலையமொன்றில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆண்களிடமே இத்தகயை கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் உள்துறை விவகார பேச்சாளரான அலிஸ்டயர் கார்மிஷல், இத்தகைய சோதனைகள் அர்த்தமற்றவை என விமர்சித்துள்ளார்.

போலித் திருமணங்களை முறியடிப்பதற்கு முந்தைய கூட்டணி அரசாங்கத்தில் லிபரல் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

14326Alistair-Carmichael“மனைவியின் பிரா அளவு மற்றும் அவர் அணிந்துள்ள உள்ளாடையின் நிறம் குறித்து ஆண்களிடம் கேள்வி கேட்கும் இவர்களின் திட்டமானது மிக சொற்ப எண்ணிக் கையான மோசடியா ளர்களையும் தடுமாற்றம் கொண்ட பெரும் எண்ணிக் கையான ஆண்களையே பிடிப்பதில் முடிவடையும் என நான் கருதுகிறேன்” என அலிஸ்டயர் கார்மிஷல் தெரிவித் துள்ளார்.

“நான் 28 வருடங்களாக உண்மையான திருமண பந்தத்தில் உள்ளேன். ஆனால், மேற்படி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version