சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் பட்னிஸ், இந்த துறையில் நுழைந்து 25 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ஓர் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தினார்.
இந்த ஃபேஷன் ஷோவில் நடிகை ஸ்ரேயாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் அற்புதமான புடவை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.
இந்த புடவை அவருக்கு உண்மையிலேயே அழகாக இருந்தது. அதிலும் அவர் அணிந்து வந்த பாணி சற்று கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.
இந்த புடவைக்கு ஸ்டேயா மேற்கொண்டு வந்த ஸ்டைல் இன்னும் அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. சரி, இப்போது டிசைனர் விக்ரம் பட்னிஸ் நடத்திய ஃபேஷன் ஷோவிற்கு நடிகை ஸ்ரேயா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போம்.
நெட் புடவை
டிசைனர் விக்ரம் பட்னிஸ் நடத்திய ஃபேஷன் ஷோவிற்கு, அவர் வடிவமைத்த வெள்ளை நிற பார்டர் கொண்ட பிங்க் நிற நெட் புடவையை கவர்ச்சிகரமான பாணியில் உடுத்தி வந்திருந்தது, அற்புதமாக இருந்தது.
ஸ்லீவ்லெஸ் கோல்டன் ஜாக்கெட்
ஸ்ரேயா இந்த நெட்டட் புடவைக்கு இடுப்பளவுள்ள ஸ்லீவ்லெஸ் கோல்டன் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.
மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
இந்த நெட்டட் புடவைக்கு ஸ்ரேயா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு வெளிர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு மை தீட்டி, நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
ஆபரணங்கள் இல்லை
ஸ்ரேயா இந்த பிங்க் நிற புடவைக்கு ஆபரணங்கள் ஏதும் அணியாமல் சிம்பிளாக வந்தது, அவரது தோற்றத்தை மேலும் சிறப்பாகக் காட்டியது.