காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகின்ற ”சிம்ப்ளி குஷ்பு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் மாதவனை பேட்டியெடுத்த குஷ்பு அவரிடம் முத்தம் பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஷீ தமிழ்’ தொலைக்காட்சியில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘சிம்ப்ளி குஷ்பு’ என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதனை காதல் மனநிலையில் குஷ்பு ரசித்து கேட்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அரங்கத்திலுள்ள ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசிப்பது போலவும் காட்டுகிறார்கள்.மேலும் குஷ்பு மாதவனிடம் முத்தம் பெறுகிறார் .
மேலும், இந்த வீடியோவை பார்த்து பல பெண்கள், பொறாமைப்பட போகிறார்கள் என்றும் ‘பெருமிதமாக தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.