இன்று அதிகாலை கிளிநொச்சி பரந்தன் பகுதி வீதி அருகே நிருத்திவைக்கப்பட்ட பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கில் மற்றும் கன்ரர் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியின் அருகே நின்ற பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சி பரந்தன் முல்லைவீதியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் பழுதாகிய நிலையில் மின் விளக்குகள் ஒளிரவிடாமல் நிருத்திவைக்கப்பட்ட பாரவூர்தியுடன் வேகத்தில் வந்த மோட்டார்சைக்கில் பாரவூர்தியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

012

மோட்டார் சைக்கில் செலுத்திய சாரதி பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளாகிய பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கில் இரண்டுடன் வேகக்கட்டுப்பட்டையிழந்த கன்ரர்வாகனம் மோதியது.

இதில் விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கில் மற்றும் கன்ரர் வாகனம் இரண்டும் பலத்த சேதங்களுக்குள்ளாகியது. இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version