சென்னை: பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த சாய் பல்லவி, தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.மலையாளத்தில் கடந்தாண்டின் மிகப்பெரிய வெற்றியைத் தந்த படம் பிரேமம். தமிழிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட இப்படம் மீண்டும் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது

24-1453621628-premam--movie2354-600

மலரே…
இப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்தவர் தமிழ்ப் பெண்ணான சாய்பல்லவி. மலையாளத்தில் இருந்து நயன்தாரா, நித்யாமேனன், அமலாபால் உள்ளிட்டோர் இங்கு வந்து கலக்கிக் கொண்டிருக்க, தமிழில் இருந்து சென்று மலையாள ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் சாய் பல்லவி.
காளி…
மலர் என்ற கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மானுடன் காளி என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மணிரத்னம் படத்தில்…
இந்நிலையில், தற்போது மணிரத்னத்தின் புதிய படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.
துல்கர்…
முன்னதாக இப்படத்தில் துல்கர் நாயகனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவருக்குப் பதில் கார்த்தி நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்…
அதேபோல், நாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது நித்யாமேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அத்தகவலை மணிரத்னம் மறுத்து விட்டார்.
சாய்பல்லவி…
இந்நிலையில், தற்போது மணிரத்னம் படத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏர்.ஆர்.ரஹ்மான்…
ரொமாண்டிக் திரில்லராக தயாராக இருக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களே ஜெனீபர் டீச்சரை மறந்து விட்டு மலர் டீச்சருக்குத் தாவ தயாராகுங்கப்பா!
Share.
Leave A Reply

Exit mobile version