விழுப்புரம்: நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம். இதுவரை 2வது வருடம் கூட பாஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் ரூ. 6 லட்சம் வரை பீஸ் வாங்கி விட்டனர்.

இந்தக் கல்லூரி மீது இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் எஸ்.விஎஸ். நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

எஸ்விஎஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சரண்யா, மோனிஷா மற்றும் பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட எஸ்.விஎஸ் நேச்சுரோபதி கல்லூரி மீது பல்வேறு முறை மாவட்ட நி்ரவாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்தான் இவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இது பெரும் பரபர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவிகள் மூவரும் எழுதி வைத்துள்ள 2 பக்க தற்கொலைக் கடிதம் வெளியாகியுள்ளது.

3-Student-girl-sucide-11
கட்டணக் கொள்ளை
சரண்யா, மோனிஷா, பிரியங்கா. நாங்க svs naturopathy medical college-ல் படிக்கிறோம். இந்த காலேஜ்ல நிறைய fees வாங்குறாங்க. கட்டுன எந்த fees-க்கும் பில் தர மாட்டேங்குறாங்க.

கோச்சிங் இல்லை
இந்த காலேஜ்ல் பீஸ் வாங்குற அளவுக்கு coaching இல்லை. staffs யாரும் இல்லை. இதை நிறையப் பேர் complaint பண்ணியும் எந்த step-ம் எடுக்கலை.

படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம்
இந்த காலேஜ்ல நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம். இங்கு படிக்கிறதுனால எங்களுக்கும், எங்க வீட்டுக்கும் stress அதிகமாயிட்டே இருக்கு.
கிரிமினல் எனத் திட்டும் சேர்மன் வாசுகி
இந்த காலேஜ் சேர்மன் வாசுகி அவர்கள் இங்கு படிக்கும் மாணவர்களை criminal என்று சொல்லித் திட்டுவார்கள். இந்த காலேஜ்ல நாங்க நிறைய கஷ்டப்பட்டிருக்கோம். இனிமேலாவது இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுங்க.
இனியாவது நடவடிக்கை எடுங்க
இந்தக் காரணத்தால நாங்க தற்கொலை பண்ணிக்கிறோம். ஆனால் இதை chairman வாசுகி நாங்க 3 பேரும் charector lessன்னு சொல்லுவாங்க. நாங்க தற்கொலை பண்ணிக்கிறதே இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுக்கனும்தான். தயவு செஞ்சு அவங்க எங்களைப் பத்தி தப்பா சொன்னா நம்பிடாதீங்க.

சுய நினைவுடன்
நாங்க இதுவரைக்கும் II year இயர் பாஸ் பண்ணல. ஆனால் இதுவரைக்கும் 6 lakhs பீஸ் வாங்கிருக்காங்க. இதை நாங்கள் சுய நினைவுடன் எழுதிக் கொள்கிறோம் என்று கூறி மூன்று பேரும் கையெழுத்திடுள்ளனர்.
Share.
Leave A Reply

Exit mobile version