கோழிக்கு பதிலாக கோழிக்கழிவை வாடிக்கையாளருக்கு ஒரு கே.எப்.சி நிறுவனம் வழங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேசண்ட்ரா ஹரிஸ் (22) என்ற பெண், சில மாதங்களுக்கு முன்னர், இங்கிலாந்தின் உள்ள வெல்லிங்பாரோ எனும் பகுதியில் உள்ள ஒரு கே.எப்.சி துரித உணவகத்திற்கு சென்று, ஜிங்கர் டவர் என்று அழைக்கப்படும் கோழி இறைச்சி உணவையும், பர்கரையும் சாப்பிடக் கேட்டுள்ளார்.

அவருக்கு அந்த உணவு பரிமாறப்பட்டது. அவர் சாப்பிட ஆரம்பித்தபோது, அந்த உணவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், அது பார்ப்பதற்கு கோழி இறைச்சி போல் இல்லை.

அந்த இறைச்சி பிங்க் நிறத்தில் இருந்துள்ளது. மேலும் அவர் ஆர்டர் செய்த பர்கரில் முடி இருந்துள்ளது.

அந்தப் பெண் கூறுகையில் “முதலில் அது சிக்கனின் மூளை அல்லது நுரையீரலாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

எனவே அந்த உணவை நான் தொட்டுக்கூட பார்க்க விரும்பவில்லை. இனிமேலும் நான் கே.எப்.சி துரித உணவகத்திற்கு எப்போதும் செல்ல மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த கே.எப்.சி நிர்வாகம் “இதற்காக நாங்கள் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சில சமயங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது.

இப்படி எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்று எங்கள் ஊழியர்களை எச்சரித்துள்ளோம். ஏதேனும் தவறு ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version