நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளதாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹோமகம நீதிமன்றத்தினால் கைது செய்யுமாறு நேற்று உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர் இன்று காலை ஹோமகம காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, ஹோமகம நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே, ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் விரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

gnanasara-court-1

நீதிவானின் இந்த உத்தரவையடுத்து., நீதிமன்றத்துக்கு வெளியே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பொதுபல சேனாவைச் சேர்ந்த பிக்குகளும் ஆதரவாளர்களும், நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். எனினும் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஹோமகம நீதிமன்றத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version