சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை அழைத்துச் செல்வதாக திருமணத்துக்கு முன்னர் தனக்கு வாக்குறுதி அளித்தார் எனவும் அவ் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை எனவும் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.

“அவர் கூறியது பொய்யாகும். திருமணத்தின் பின்னர் துருக்கிக்கு செல்வதற்குப் பதிலாக தனது பண்ணைக்குச் சென்று அங்குள்ள ஒட்டகங்களுடன் அவர் சுமார் 45 நாட்கள் வசித்தார்.

இப்போது எனக்கு சுதந்திரம் வேண்டும், இதன் மூலம் தனது ஒட்டகங்களுடன் அவர் விரும்பிய காலம் இருக்கலாம் எனவும் அப் பெண் கூறியுள்ளார்.

தற்போது அப்பெண் கணவரின் வீட்டிலிருந்து வெளியேறி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் எனவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version