ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினினின் முன்னாள் மனைவியான லூத்மிலா தன்னை விட 21 வயது குறைவான நபரை மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1938ம் ஆண்டு லூத்மிலா என்ற பெண்ணை கரம் பிடித்தார் விளாடிமிர் புடின், இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

lyudmila_002இந்நிலையில் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

புடின் தன்னை விட மிக மிக இளம் வயதுப் பெண்ணான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கபயேவாவுடன் தொடர்பு வைத்திருப்பதால்தான் என்று செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே லூத்மிலா தன்னை விட 21 வயது குறைந்த நபரை மறுமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது தற்போது 58 வயதாகும் லூத்மிலா, 37 வயதான கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஆர்தர் ஆச்செர்டினி என்பவரையே மறுமணம் செய்துள்ளாராம்.

மேலும் இவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கடவுச்சீட்டில் கூட லூத்மிலா பெயரை மாற்றிவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version