சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையில் அனாதையாக நின்றுக்கொண்டு இருந்த காரை சோதனை செய்தபோது, அதற்குள் 1,00,000 பிராங்க் பணம் இருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள சாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கார் ஒன்று ஓட்டுனர் இல்லாமல் அனாதையாக நின்றுள்ளது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காருக்கு அருகில் சென்று ஆய்வு செய்தபோது, காரின் கதவுகள் பூட்டப்படாமலேயே இருந்துள்ளது.

பின்னர், காரின் முன் இருக்கைக்கு அருகில் ஒரு பொட்டலம் இருந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த பொலிசார் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதற்குள் 100 மற்றும் 200 பிராங்க் தாள்கள் அடங்கிய 1,00,000 பிராங்க் பணம் கட்டு கட்டாக இருந்துள்ளது.

உடனே சுற்று முற்றும் பார்த்த பொலிசார் அங்கு யாரும் இல்லாததை கண்டு உடனடியாக மற்றொரு ரோந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலை பெற்ற அந்த பொலிசார் வாகனத்தில், அந்த சாலை சென்ற திசையில் சென்று காரின் உரிமையாளரை தேடியுள்ளார்.

அப்போது, சில மீற்றர்கள் தொலைவில் 31 வயதான நபர் ஒருவர் கையில் பாட்டிலும் நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார்.

நபரை வழிமறித்து பொலிசார் விசாரணை செய்தபோது தான் உண்மை வெளியே வந்துள்ளது.

அப்போது பேசிய அந்த நபர், ‘சார், அந்த கார் என்னுடையது தான். அதில் உள்ள 1,00,000 பிராங்க் பணமும் என்னுடையது தான். வரும் வழியில் காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு பெட்ரோல் நிலையத்தை தேடி அலைந்துக்கொண்டு இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார்.

ஆனால், நபரின் பதிலில் பொலிசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. ‘ஒரு லட்சம் பிராங்க் காரில் வைத்திருக்கும் ஒரு நபர், தன்னுடைய காரில் போதுமான அளவிற்கு பெட்ரோலை ஏற்கனவே நிரப்பி வைத்துக்கொள்ள மாட்டாரா?’ என சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனை அந்த நபரிடம் பொலிசார் வேள்வியாக எழுப்பி விசாரணை செய்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அந்த நபர், ‘சார், என்னுடைய பரம்பரை சொத்து எனக்கு திரும்ப கிடைத்துள்ளது.

இப்பொழுது தான் ஒரு தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று அதல் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு வருகிறேன்’ என கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்த அந்த நபர் கூறிய அலுவலகத்தில் விசாரணை செய்தபோது, அவர் கூறியதும் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.

அது மட்டுமில்லாமல், அந்த நபருக்கு பரம்பரை சொத்தாக சுமார் 90 மில்லியன் பிராங்க் வரை கிடைத்திருப்பதாக வந்த உறுதியான தகவலில் பொலிசார் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

’90 மில்லியன் பிராங்க் சொத்திற்கு சொந்தக்காரன் ஒருவன், வெறும் 1,00,000 பிராங்க் பணத்தை காரில் கவனிப்பு இன்றி விட்டு சென்றதில் ஆச்சர்யம் இல்லை’ என நினைத்த பெருமூச்சு விட்ட பொலிசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version