தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் இராமசாமி மகேந்திரன் (வயது 53) என்ற நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை அருகில் உள்ள தோட்டமான ட்ரூப் தோட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
ஒன்றரை இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக கோரி இந்த சிறுநீரகத்தை பெற்ற அந்த நபர் வெறும் பத்தாயிரம் ரூபாவை மாத்திரம் வழங்கி ஏறமாற்றியுள்ளார்.
இவ்வாறு பணத்திற்காக ஏமாந்த மகேந்திரன் இன்று தொழில் .இன்றி நோய்வாய்பட்டு படுக்கையில் இருக்கின்றார்.
தனது 4 பிள்ளைகளில் ஒருவர், வறுமையின் காரணமாக கொழும்புக்கு வேலை தேடி சென்றிருக்கும் அதேவேளை தனது மனைவி (சின்னையா விஜயகுமாரி – வயது 35) மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதாக அவர் கூறுகின்றார்.
சமீபத்தில் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்தில் மண்டப வேலைக்கு சென்ற அவர் தவறி விழுந்து கை ஒன்று உடைந்த வண்ணம் நோய்வாய்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதுடன், தலையில் அடிப்பட்டதால் சுயநினைவுடன் செயலாற்ற முடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளார்.
குடும்ப வருமானம் வறுமை காரணமாக தனது சிறுநீரகத்தை கொடுத்ததாகவும் பணம் கிடைத்தால் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்ய முடியும் என்ற நோக்குடன் உதவி என்ற ரீதியில் வழங்கிய சீறுநீரகத்திற்கு சன்மானம் கிடைக்காத காரணத்தினால் ஏமாந்து போன நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
சிறுநீரகம் பெற்றுக்கொண்டவர் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவும் சிறுநீரகத்தை கொடுத்த நான் இந்த நிலையில் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
சிறுநீரகத்தை பெற்றவரிடம் பணம் கேட்டபொழுது உங்களுடைய வைத்திய செலவை நான் தான் முன்னெடுத்தேன். ஆகையால் இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. வசதி இருக்கும் பொழுது உதவி செய்கின்றேன் என அவர மறுப்பதாக இராமசாமி மகேந்திரன் கூறுகின்றார்.