நோர்வேயை சேர்ந்த நானோ என்ற பெண், பூனை போன்றே தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டதுடன் பூனைகளுடன் மியாவ் மொழியில் பேசவும் செய்கிறார்.
நோர்வேயை சேர்ந்தவர் நானோ, தற்போது 20 வயதாகும் நானோவுக்கு 16 வயதில் தான் ஒரு பூனை என்பதை உணர்ந்து கொண்டாராம்.
எனக்கு தண்ணீரை கண்டால் பிடிக்காது, தெருவில் நாய்களை பார்த்தாலும் பயந்து நடுங்கி போய்விடுவேன், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் என்றால் அவ்வளவு பிரியம்.
பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் எனது உடம்பில் மரபணு மாற்றமிருந்தது தெரியவந்தது, தொடர்ந்து பூனைகளை போன்று அலங்காரம் செய்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு நான்கு கால்களால் நடப்பது என்றால் அலாதி பிரியம் என்றும், பூனையாக எலியை பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப்பில் வெளியான இவரது பேட்டியை 122,000 நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.