தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய நடுத்தர வயது நாயகர்களில் விஜய், அஜித் இருவரும்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.

சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை விட விஜய், அஜித் இருவரின் படங்கள் உலக அளவில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடிக்க பல நடிகர்களிடம் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இயக்குனர்களைப் பொறுத்தும், இசையமைப்பாளர்களைப் பொறுத்தும் தங்களது படங்களை உலக அளவில் கொண்டு சேர்க்க பலரும் முயற்சித்து வருகிறார்கள்.

’24’ படத்தைப் பொறுத்தவரையில் சூர்யாவுக்கு அது கொஞ்சம் எளிதாகவே கிடைத்துவிட்டது.

’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இதற்கு முன் தெலுங்கில் இயக்கிய ‘மனம்’ படம் அவருக்கு தெலுங்குத் திரையுலகில் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதனால் விக்ரம்குமார் பெயரை வைத்தும் சூர்யா தனக்கிருக்கும் தெலுங்கு மார்க்கெட்டை வைத்தும் தெலுங்கிலும் ’24’ படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் இதுவரை 2150 தியேட்டர்களில் படம் வெளியாவதாக நேற்றே அறிவித்தார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார்  250 தியேட்டர்களுக்கு மேல் ’24’ படம் வெளியாகிறதாம்.

‘தெறி’ படம் 150 தியேட்டர்கள் வரைதான் வெளியானது.

’24’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றால் ‘தெறி’ படத்தின் வசூலை மிஞ்சவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் சூர்யாவுக்கு ’24’ வெற்றி பெற்றால் மட்டுமே திருப்புமுனை என்பது உறுதி.

Share.
Leave A Reply

Exit mobile version