போரில் மடிந்த புலிகள் எல்லோரும் ‘மாவீரர்கள்’. தங்கள் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்ட  புலிகள் எல்லோரும் ‘மகாகெட்டிக்காரர்கள்’.  (சைனைட்   குப்பி பாவிக்க  தெரியாதவராம். விபரம் உள்ளே…..)

அப்படிப்பட்ட   ‘மகாகெட்டிக்காரனான,  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார், தனது கணவரை கைது செய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தன்னுடைய கணவரை விசாரணை செய்ய வேண்டும் என பல இனந்தெரியாத நபர்கள் வந்து போனதாகவும் அவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்த மறுத்ததன் காரணமாக அவர்களை விசாரணை செய்ய தான் மறுத்ததாக அவர் தெரிவித்தார்.

தனது கணவரை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இன்று காலை பொலிஸாருடன் வருகை தந்த சிலர் தனது கணவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச்சென்று அங்கு பதிவு செய்துவிட்டு அங்கிருந்து மேலதிக விசாரணைக்காக கல்முனைக்கு கொண்டு செல்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளதாக பிரபா அவர்களின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து இறுதி யுத்தத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் பின்னர் இராணுவத்தினரிடம் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததுடன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இவர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சந்திவெளியை பிறப்பிடமாக கொண்ட பிரபா அவர்கள் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90-1
கடைசிக்கட்டப் போரில் “40 ஆயிரம்…50 ஆயிரம்… ஒரு இலட்சம்’... பேர் ஏன் அதைவிட கூடுதலான பொதுமக்கள் முள்ளிவாய்காலில் இறந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் முக்கியமான புலிகள் இயக்க தளபதிகளும், அவர்களின் மனைவி பிள்ளைகளும் எப்படி சாகாமல் தப்பித்துக்கொண்டார்கள் என்றுதான்   தெரியவில்லை?

போரில் மடிந்த புலிகள் எல்லோரும் ‘மாவீரர்கள்’. தங்கள் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்ட புலிகள் எல்லோரும் ‘மகாகெட்டிக்காரர்கள்’

இவர்கள் எல்லோரையும்விட  ‘அதிமகா கெட்டிக்காரர்கள்’ வெளிநாட்டில்  வசிக்கிறார்கள்.

அவர்கள்தான் (புலியாதரவாளர்கள்) தங்கள் இன்னுயிரையும், தங்கள் பிள்ளைகளின் இன்னுயிரையும் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துக்கொண்டு ‘தமிழீழம்’ வேண்டுமென விடாபிடியாக நின்று புலிகளுக்கு பணம்கொடுத்து, புலிகளை தூண்டிவிட்டு ஆதரவளித்தவர்கள்.

அவர்களும் அவர்களது பிள்ளைகளும் தான்  அதிமகா கெட்டிக்காரர்கள்.

மாவீரர்கள் எல்லோரும்  விண்ணுலகத்தில் மேலே  சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள்..   அதிமகா கெட்டிக்காரர்களின்  பிள்ளைகள்  மேற்படிப்புக்காக   பல்கலைகழகத்தை   சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிந்த கையோடு முதன்முதலில் நாட்டுக்கு போனவர்கள் நான் மேற்குறிப்பிட்ட அதிமஹா கெட்டிக்காரர்கள்தான். இப்ப வருடத்துக்கு மூன்றுதடவை போகிறார்கள்.

ஏன் அடிக்கடி போகிறீர்கள் என்று கேட்டால், தாங்கள் கள்ளுக்குடிக்க போகிறார்களாம்.

மற்றவர்களின் பிள்ளைகளை மாவீரர்கள் ஆக்கி, தங்களின் பிள்ளைகளை மகாகெட்டிக்காரர்களாக வாழவைக்க நினைத்தவர்கள் (சுயநலவாதிகள்) இப்ப வெளிநாடுகளில் எப்படியிருக்கிறார்கள் தெரியுமா??

மனமும் ஊனமாகி, உடலும் ஊனமாகி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கை, கால், முதுகு, மூட்டு……, என பல அங்க அவயவங்கள் இயங்காமல் பலபேர் வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் விடிய எழும்பி வேலைக்கு இருமிக்கொண்டு போகிறார்கள்.

அதைவிட சிலதுக்கு மூளை முற்றாக சரியில்லாமல் போய்விட்டது. சிலது பலவியாதிகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அனேகமான தமிழர்களின் பிள்ளைகள் வலதுகுறைந்தவர்களாக பிறந்துள்ளார்கள்.

‘தாம் வாழந்த நாடே வேண்டாம் என நாட்டைவிட்டு பிழைப்பதற்காக ஓடிவந்துவிட்டு, பாதுகாப்பாக  வெளிநாட்டில்  இருந்துகொண்டு தங்களுக்கு ஒரு நாடுவேண்டுமாம்?

நாடு வேண்டுமென்றால்  நீ  நாட்டிலிருந்தல்லவா   போராடியிருக்க வேண்டும்?

“இப்ப கிடைத்த வாழ்க்கையையும் துலைத்துவிட்டு, வாழ்ந்த வந்த நாட்டையும் துலைத்துவிட்டு” மற்றவர்கள் மேல் பழி சுமத்திக்கொண்டிருக்கிறார்கள்.

செய்த வினையும் செய்யும் வினையும் மனிதனை சூழ்ந்துகொள்கிறது. மடமைகளுக்கு புரியுமா இது?

-கி.பாஸ்கரன்-

Share.
Leave A Reply

Exit mobile version