அநுராதபுரம், திறப்பன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துருவில பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் உட்பட மூவர் கார் ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகி யுள்ளன.

16353IMG_4005-1024x682துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரரான சரத் பண்டார எனப்படும் எஸ்.எஃப். பண்டா, யூ.சமன்குமார மற்றும் காலி ஜின்தோட்டையை சேர்ந்த பிரதீப்குமார ஆகியோர் என பொலி ஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கார் ஒன்றிலிருந்து இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இம் மூவரில் சரத் பண்டார என்ற சந்தேக நபர் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் ஒன்பது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகள் தற்போது அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆயுதங்களை காண்பித்து  அச்சுறுத்தி கப்பம் கோரியமை உட்பட மேலும் பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலும் தம்புத்தேகம மற்றும் நொச்சியாகம ஆகிய நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்குகளுடனும் தொடர்புடைய சந்தேக நபர் இவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறைச் சாலை கைதிகள் நடாத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு இந் நபர் தலைமை தாங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச் சம்பவத்தில் உயிரிழந்த இம் மூவரது பிரேத பரிசோதனை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷன கெகுனவெல அநுராதபுரம் போதனா வைத்திய சாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் திரப்பன பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அனுராதபுரத்தில் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: மூவர் உயிரிழப்பு
30-04-2016

அனுராதப்புரம் – திறப்பனை துருவில பகுதியில், துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சிற்றூர்ந்து ஒன்றிலிருந்து மூன்று மனித உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த உடலங்கள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

திறப்பனை சிறப்பு காவற்துறை குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தமிழில் செய்தியை பார்வையிட

Share.
Leave A Reply

Exit mobile version