வடக்­கிலும், கிழக்­கிலும் கடந்த ஒரு மாத­மாக நடந்­து­வரும் இர­க­சியக் கைதுகள், கடத்­தல்­களின் பின்­னணி குறித்த மர்­மங்கள் இன்னமும் முழு­மை­யாக வெளி­வ­ரா­துள்­ளன.

புலி­களின் முன்னாள் தள­ப­திகள், போரா­ளி­களை குறி­வைத்தே இந்தக் கைதுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதிலும், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை புலி­களின் கிழக்கு மாகாணத் தள­ப­தி­யாக இருந்த கேணல் ராம் கடத்­தப்­பட்டு , 24 மணி­நே­ரத்­துக்குப் பின்னர் பயங்­க­ர­வாதத் தடுப்பு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

அதை­ய­டுத்து, சாள்ஸ் அன்­ரனி சிறப்புப் படை­ய­ணியின் சிறப்புத் தள­ப­தி­யா­கவும், பின்னர் அம்­பாறை மாவட்டத் தள­ப­தி­யா­கவும் இருந்த கேணல் நகுலன் மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்ட புல­னாய்வுப் பொறுப்­பா­ள­ராக இருந்த கலை­ய­ரசன் அல்­லது அறி­வ­முதன் ஆகியோரும்  அடுத்­த­டுத்த நாட்­களில் கடத்­தப்­பட்­டனர் அல்­லது கைது செய்­யப்­பட்­டனர்.

இவர்கள் போரின் முடிவில் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு, புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்­ட­வர்கள்.

மீண்டும் இவர்கள் கைது செய்­யப்­பட அல்­லது கடத்­தப்­படத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து. முன்னாள் போரா­ளிகள் மத்­தியில் பதற்றம் ஏற்பட்டி­ருக்­கி­றது.


ram-300x200
(தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம்)

சந்­தேக நபர் ஒரு­வரைக் கைது செய்யும் போது கையா­ளப்­படும் வழக்­க­மான நடை­மு­றை­க­ளுக்கு அப்பால் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கின்ற ஒரு போக்கு அண்­மையில் வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

அண்­மையில் அமெ­ரிக்கா வெளி­யிட்ட மனித உரி­மைகள் நடை­மு­றைகள் – 2015 அறிக்­கையில் கூட, விடு­தலைப் புலி­களின் உறுப்பினர்கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்கள் கண்­ட­படி கைது செய்­யப்­ப­டு­வதும், சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வதும் ஏனைய வழி­களில் துன்­பு­றுத்­தப்­ப­டு­வதும் தொடர்­வ­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த அறிக்கை வெளி­யான பின்­னரும் கூட, அதே பாணி­யி­லான கடத்­தல்­களும், கைது­களும் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளைக் குறி­வைத்து தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன.

சாவ­கச்­சே­ரியில் தற்­கொலை அங்கி மற்றும் வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­டதன் தொடர்ச்­சி­யாக 33 பேர் கைது செய்­யப்­பட்டு விசாரிக்­கப்­ப­டு­வ­தாகத்  தெரி­வித்­தி­ருக்­கிறார்  பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி.

எனினும், சாவ­கச்­சேரி சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் இன்­னமும் முடி­வ­டை­ய­வில்லை என்றும், விசா­ர­ணைகள் முடிந்த பின்னரே, எதையும் கூற முடியும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

சாவ­கச்­சே­ரியில் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கும், யாழ்ப்­பாணம், வன்னி, திரு­கோ­ண­மலை அம்­பாறை வரை முன்னாள் போரா­ளிகள் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கும் இடையில், திட்­ட­மிட்டே ஒரு முடிச்சுப் போடப்­ப­டு­கி­றதா? என்ற சந்­தே­கங்­களை ஏற்படுத்தியிருக்­கி­றது.

அதிலும், புலி­களின் முன்னாள் தள­ப­தி­க­ளான ராம், நகுலன், கலை­ய­ரசன் ஆகி­யோரின் கைதுகள், பர­வ­லான சந்­தே­கங்­க­ளையும், கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கி­ன்றன.


(தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன்)

ஏனென்றால், போர் முடி­வுக்கு வந்த போது, இவர்கள் எவரும் முள்­ளி­வாய்க்கால் களத்தில் இருந்­தி­ருக்­க­வில்லை. அம்­பாறை மாவட்டத்தின் கஞ்­சிக்­கு­டிச்­சாறு காட்­டுப்­ப­கு­தியில் இருந்து செயற்­பட்டு வந்­த­வர்கள் இவர்கள்.

போர் முடிந்த பின்னர், இவர்கள் இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட புலி­களை வைத்தே இவர்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வினர் இவர்­களை திரு­கோ­ண­ம­லையில் வைத்துக் கைது செய்­த­தாக கூறப்­பட்­டது.

புலிகள் இயக்கம் அழிக்­கப்­பட்ட பின்­னரும், எஞ்­சி­யி­ருக்கும் உறுப்­பி­னர்­க­ளையும், ஆத­ர­வா­ளர்­க­ளையும் குழப்பும், உள­வியல் போர் ஒன்றை இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு அப்­போதே மேற்­கொண்­டி­ருந்­தது.

2009 நவம்பர் 27ஆம் திகதி, ராம் மாவீரர் நாள் செய்­தியை வெளி­யிட்­டி­ருந்தார். அப்­போதே அவர், இரா­ணுவப் பிடியில் சிக்­கி­யி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி, ராம், நகுலன் போன்­ற­வர்­களை வெளி­நா­டு­களில் உள்ள புலி­களின் ஆத­ர­வா­ளர்கள், செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொள்­ள­வைத்து, பணம் பறிக்கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.

புலிகள் இயக்­கத்­துக்கு உயிர் கொடுப்­ப­தற்­காக என்று, இவ்­வாறு பணமும் பெறப்­பட்­டது.

இந்­திய வார­இதழ் ஒன்றின் செய்­தி­யாளர் ஒருவர் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களால் அம்­பாறைக் காட்­டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, புலிகள் இருக்­கி­றார்கள் என்று நம்ப வைக்­கவும் முயற்­சிக்­கப்­பட்­டது.

அவர்­களால், சொல்லிக் கொடுக்­கப்­பட்­டது போன்று, ஐந்­தா­வது கட்ட ஈழப்போர் தொடங்­க­வி­ருப்­ப­தாக இந்­திய செய்­தி­யா­ள­ருக்கு ராம் பேட்டி கொடுத்­தி­ருந்தார்.

புலிகள் இயக்கம் முள்­ளி­வாய்க்­காலில் அழிக்­கப்­பட்ட பின்னர், தமிழ் மக்­க­ளையும், புலி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளையும் குழப்பும் வகையில், முன்­னெ­டுக்­கப்­பட்ட உள­வியல் நட­வ­டிக்­கை­களே அவை.

போரின் போது, படை­யி­ன­ருக்கு எதி­ராக வைராக்­கி­யத்­துடன் போரிட்ட புலி­களின் தள­ப­திகள் கூட, போருக்குப் பின்னர், படை­யி­னரின் சொற்­படி ஆடும் பொம்­மை­க­ளாக்­கப்­பட்­டனர்.

ராம், நகுலன் போன்­ற­வர்கள் 2013ஆம் ஆண்டு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட பின்னர், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­ற­வர்­க­ளா­கவே, இருந்து வந்­தனர். அவர்­க­ளுடன் புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்ந்து தொடர்­பு­க­ளையும் பேணி வந்­தி­ருந்­தனர்.

நகுலன் கைது செய்­யப்­பட்ட பின்னர், அவ­ரது தாயார் அளித்­துள்ள பேட்­டி­களில், நீர்­வேலி இரா­ணுவ முகாமில் இருந்து மோகன், ரவி என இருவர் அடிக்­கடி தமது வீட்­டுக்கு வந்து செல்­வ­தா­கவும், நகு­லனும் நீர்­வேலி முகா­முக்கு சென்று வந்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

இந்த விவ­காரம், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு, இவர்­களை வைத்து மீண்டும் ஏதேனும், இர­க­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்குத் திட்­ட­மிட்­டதா என்ற சந்­தே­கங்­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

ராம், நகுலன் போன்­ற­வர்­களை வைத்து இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு ஏற்­க­னவே இர­க­சிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது,

இந்தச் சந்­தர்ப்­பத்தில், ராம் கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டதும், அவ­ருக்கும் கிழக்கில் சர­ண­டைந்த 600 பொலிஸார் கொல்லப்­பட்ட சம்­பவம் மற்றும் பல்­வேறு இரா­ணுவ முகாம்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­ப­தா­கவும், ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கின.

ஆனால் ராம் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, நகுலன் கைது செய்­யப்­பட்­டதால், அத்­த­கைய குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான வாய்ப்­புகள் இல்லாது போயின.

கிழக்கில் சர­ண­டைந்த பொலிஸார் கொல்­லப்­பட்ட சம்­பவம் நிகழ்ந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம், நகுலன் 15 வய­தான ஒரு சிறுபோரா­ளி­யாகத் தான் இருந்தார்.

அப்­போது அவர், கிழக்­கிலும் இருக்­க­வில்லை. போரின் இறு­திக்­கட்­டத்தில் தான் இவர்கள் இரு­வரும் இணைந்து கிழக்கில் செயற்பட்டிருந்­தனர்.

ஒன்­றுடன் ஒன்று இணைந்த சம்­ப­வங்­க­ளாக இருக்கும் போது, எங்­கா­வது ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அவ்­வா­றாயின், போரின் இறு­திக்­கட்டம்  அல்­லது  அதற்குப் பிந்­திய விவ­கா­ரங்கள் தொடர்­பா­கவே இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும்.

எவ்­வா­றா­யினும், இவர்­களின் கைது முன்னாள் போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாவிட்டாலும் அதே பாணியிலான கடத்தல்களும், கைதுகளும் இந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க தளபதிகள், போராளிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவு தமது தேவைகளுக்காக பயன்படுத்தியது பற்றிய விடயங்கள், இன்னமும் நீதிமன்றங்களில் நடக்கின்ற வழக்குகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம், நகுலன் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகத் தான் கைது செய்யப்பட்டனரா அல்லது இனிமேலும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைக்காகத் தான் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது போகப் போகத் தான் தெரியவரும்.

-சுபத்ரா-

Share.
Leave A Reply

Exit mobile version