ஆறு­ த­சாப்த உரிமை போராட்­டத்தால் அமை­தி­யான வாழ்­வொன்றை வாழ­ முடி­யாத நிலையில் வட­மா­காண மக்கள் உள்ளனர்.

ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்­னரும் கூட நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­யாத நிலை­மையே தற்போதும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

யுத்தம் நிறை­வ­டைந்­த­தாக அர­சாங்கம்  அறி­வித்து  தற்­போது   ஏழாண்­டுகள் கடந்­துள்ள போதும் தற்­போதும் வடக்கு மக்கள் உளரீதியான அச்­சத்­துடன் அன்­றா­டப்­பொ­ழுதை நகர்த்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­யி­லி­ருந்து வெளியே வர­மு­டி­யா­த­வர்­க­ளா­க­வுள்­ளனர்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரும் கூட இடம்­பெற்ற இரா­ணுவ ரோந்­துகள், விசா­ர­ணைக்­கான அழைப்­புக்கள், விசேட தேடு­தல்கள், புலனாய்­வா­ளர்­களின் செயற்­பா­டுகள் போன்­ற­வற்றால் பொது­மக்கள் அச்­ச­மான சூழலில் இருந்­தனர். தற்­போது அவை கணி­ச­மாக குறைந்­தி­ருந்­தாலும் முழு­மை­யாக இல்­லை­யெனக் கூற­மு­டி­யாது.

அதே­நேரம் யுத்­த­கா­லத்­தி­லி­ருந்த நிலை­மை­க­ளி­லி­ருந்து திடீ­ரென ஏற்­பட்ட மாற்­றத்தால் வடக்கு இளை­ஞர்கள் குழுக்களுக்கிடையிலான வீதி மோதல்­களும், ஏதோ­வொரு கார­ணத்­திற்­காக பழி­வாங்கும் செயற்­பா­டு­களும் அவ்­வப்­போது அரங்கேறுவ­தற்கு ஆரம்­பித்­தன.

அத­னைத்­தொ­டர்ந்த காலப்­ப­கு­தி­களில் கிறிஸ் பூதம் என்ற விவ­காரம் பூதாகர­மா­கி­யது. அது­கூட தேர்­த­லை­யொட்­டிய காலப்­ப­கு­தி­களில் எழுந்­தி­ருந்­த­மையை ஆழ்ந்து பார்க்­கையில் அவ­தா­னிக்க முடிந்­தது.

அதன்­பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வடக்கில் இளம் சமு­தா­யத்­தி­னரின் போதைப்­பொருள் பாவனை, பாட­சாலை மாணவி முதல் வயோதிப பெண்கள் வரையில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் போன்ற சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தன. இதனால் தமிழ் சமூ­கத்தின் சாதா­ரண வாழ்க்கையை நகர்த்­து­வதில் பலத்த நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.

பாட­சா­லைக்கும், தனியார்  வகுப்­பு­க­ளுக்கும்   மாண­விகள் செல்­கின்­றமை, பெண்கள்  வேலைத்­த­ளங்கள் உட்­பட தமது தேவை­க­ளுக்­காக வெளியில் நட­மா­டு­கின்­றமை போன்­றவை உட்­பட பெரும் அச்­ச­மான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அதே­நேரம் சிறு­வர்கள் மீதான பாலியல் ரீதி­யான செயற்­பா­டு­களும் வெகு­வாக அதி­க­ரி­த்­தி­ருந்­தன.

இவ்­வா­றான  நிலை­மை­கள் உடன் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்ற கருத்­துக்கள் அர­சியல்இ சமூகஇ சமய மட்டங்களிலி­ருந்து வலுத்­த­போது யாழ்.மாவட்ட நீதி­ப­தி­யாக எம்.இளைஞ்­செ­ழியன் நிய­மிக்­கப்­பட்­ட­தோடு வடக்­கிற்­கான பொலிஸ் மற்றும் இரா­ணுவ உயர்­மட்டப் பத­வி­க­ளிலும் மாற்­றங்கள் நிகழ்ந்­தன.

இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களால் அக்­குற்­றங்கள் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டன எனக் கூறக்கூ­டி­ய­ள­விற்கு நிலை­மைகள் மாறி­யி­ருந்­தன.

எனினும் அண்­மைக்­கா­ல­மாக யாழ்.மாவட்­டத்தில் அரங்­கே­றி­வரும் சம்­ப­வங்­களால் பொது­மக்கள் அச்­ச­ம­டைந்து பதற்­றத்­துடன் வாழுமொரு நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

ஆம்,  ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தற்­போது வரையில் கொள்ளை, வாள்­வெட்­டென தலா ஆறு சம்­ப­வங்கள் அரங்கேறியுள்ளதோடு பொது மக்­களை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்கும் சம்­ப­வ­மொன்றும் பதி­வா­கி­யுள்­ளது.

குறிப்­பாக அச்­சு­வேலி, கோப்பாய், நீர்­வேலி, சங்­கானை, வட்­டுக்­கோட்டை பகு­தி­களில் தொடர்ச்­சி­யாக வீடு­களும் வியா­பா­ர­ நிலையங்களும் உடைத்து கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

குடா­நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வழிப்­ப­றி­களும் அவ்வப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. அதே­போன்று உடுவில், யாழ்ப்­பாணம், கோப்பாய் போன்ற பகு­தி­களில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

பட்­டப்­ப­கலில் பகி­ரங்­க­மாக இந்த வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இதனை விடவும் வெள்ளிக்­கி­ழமை யாழ். நக­ரி­லுள்ள நான்கு வீடு­க­ளுக்கு தொட­ராகச் சென்ற கொள்ளைக் கும்பல் வீடு­க­ளுக்கு வெளியே இருந்த வாக­னங்கள் மற்றும் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­வித்­துள்­ளன.

யாழ்ப்­பாணம் மாம்­பழச் சந்­திக்கு அரு­கி­லுள்ள விடு­தி­யொன்றில் காலி மாவட்­டத்தைச் சேர்ந்த சுற்­றுலாப் பய­ணிகள் தங்கியிருந்துள்ளனர்.

அங்கு மூன்று மோட்டார் சைக்­கிளில்   முகத்தை கறுப்பு துணி­களால் மூடி­ய­வண்ணம் வந்த ஆறுபேர் கொண்ட குழு­வினர் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணி­களின் பேருந்தை இரும்புக் கம்­பிகள் மற்றும் வாள்கள் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

மற்­றொரு வீட்­டுக்குச் சென்ற இக்­கு­ழு­வினர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும்  துவிச்­சக்­க­ர­வண்­டி­களை சேதப்­படுத்தி வீட்டின் கதவின் மீதும் கண்­ணா­டிகள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். அதேபோல் ஏனைய இரு வீடு­க­ளிலும் தாக்­கு­தல்கள் நடத்தப்பட்டிருக்கின்­றன.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்ற போதும் தற்­போது வரையில் அத­னுடன் தொடர்­பு­பட்ட எந்­த­வொரு நபர் கூட கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில் வட­மா­காண   முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், வட­மா­கா­ணத்தில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து செல்­கின்­றன.

இந்­நி­லையில் அதி­க­ரிக்கும்   இந்த குற்­றச்­செ­யல்­களின் பின்­ன­ணியில் யார்­ இ­ருக்­கின்­றனர் என்­பதை உட­ன­டி­யாக கண்­ட­றிந்து அவற்றை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே­நேரம் மாவட்ட நீதி­பதி இளஞ்­செ­ழி­யனும் தனது கடு­மை­யான எச்­ச­ரிக்­கையை வெளியிட்­டுள்­ள­தோடு அடுத்து எடுக்கப்படவேண்டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குறிப்­பாக கூறு­வ­தாயின், வீதிச்­சண்­டித்­த­னத்தில் ஈடு­ப­டுவோர், 6 மணிக்கு பின்னர் வீதி­களில் கூடும் இளை­ஞர்கள் சிறை­செல்­வ­தற்கு நேரிடும்.

போதை­வஸ்து வழக்­கு­களில் யாழ்.மன்றில் ஒரு­வ­ரு­ட­மாக பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரிய குற்­றங்­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­றது என்­பதை குறிப்­பிட்­டுள்ளார்.

பாசையூர் சென். அந்­தனிஸ் விளை­யாட்­ட­ரங்கு, புதிய செம்­மணி வீதி, கல்­வி­யங்­காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்­குவில் சந்தி, சுன்னாகம் சந்தி, யாழ்.இந்­துக்­கல்­லூரி வளாகம், ஆகி­ய­வற்றில் சட்ட­வி­ரோத ஒன்றுகூடல்­களும்,

ரவு­டிகள் நட­மாட்­டமும் காணப்­ப­டு­வ­தாக தக­வல்கள் கசிந்துள்­ளதால் விசேட கண்­கா­ணிப்­புக்­களை மேற்­கொண்டு நட­வடிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதே­போன்று ரவு­டித்­தனம், சமூக சீர்­கேடு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்­க­ளுக்கு ஈவி­ரக்கம் காட்­டப்­ப­ட­மாட்­டாது என்­ப­தோடு தனி­ம­னி­தனை விடவும் சமூக நலனே நீதி­மன்­றத்­திற்கு முக்­கி­ய­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

யாழ்.குடா­நாட்டுப் பகு­தியில் இவ்­வா­றான இறுக்­க­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நீதி­பதி பொலி­ஸாரைப் பணித்துள்ளபோதும்,   இடம்­பெறும் சம்ப­வங்கள்  குறித்து மக்கள் பிர­தி­நி­திகள் பொலி­ஸாரின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்­ற­போதும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் திடீ­ரென அதி­க­ரித்­தி­ருக்­கின்­ற­மைக்­கான பின்­னணி தொடர்பில் சில வினாக்கள் மேலெ­ழு­வதை தவிர்க்கமுடி­யா­துள்­ளது.

முத­லா­வ­தாக  வட­மா­க­ாணத்தைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று பொது­ம­க­னுக்கு ஒரு இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சிவில் சேவைக்­காக அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். அவற்­றுக்கு மேல­தி­க­மாக, குற்­ற­வியல், பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் நட­மா­டு­கின்­றனர்.

விசேட ரோந்து நட­வ­டிக்­கைகள் நடை­பெறு­கின்­றன. இவற்­றுக்­கெல்லாம் அப்பால் யாழ்.நக­ரத்­திற்கு வெளியில் இடம்­பெற்ற விடயங்களை விடுத்து பார்க்­கையில் யாழ். நக­ரத்­தினுள் எவ்­வாறு  துணி­க­ர­மான கொள்ளை மற்றும் அச்­சு­றுத்தும் செயற்­பாடுகள் முன்னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக வீடு­களில் கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. சில இடங்­களில் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றது. கொள்­ளை­யிட்ட வீடு­களில் தம்­மைப்­பற்றி சாட்­சி­ய­ம­ளித்தால் விளை­வுகள் வேறு­வி­த­மாக அமையும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்­டி­ரு­க்கின்­றது.

அதன் பிர­காரம் பார்க்­கையில்   இங்கு தனியே கொள்­ளை­யி­டு­வது மட்டும் நோக்­க­மல்ல. அத­னையும் தாண்டி மக்­களை உள ரீதி­யாக அச்­சு­றுத்தி வைத்­தி­ருக்க வேண்­டு­மென்ற பின்­ன­ணியில் காணப்­ப­டு­கின்­றமை புல­னா­கின்­றது.

மூன்­றா­வ­தாக வெளிமா­வட்­டத்­தி­லி­ருந்து வந்த மக்­க­ளி­டத்தில் கொள்­ளையோ பறி­மு­தல்­களோ செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக அவர்களையும் அச்­சு­றுத்­திய நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

இதன்­மூலம் பெரும்­பான்மை இனத்­த­வர்கள், வெளிமா­வட்­டத்­த­வர்கள் யாழ்.மண்ணில் காலடி பதிப்­ப­தற்கு உகந்த சூழல் அல்ல என்பதை காட்­டு­வ­தற்கு விழை­கின்­றார்­களா அல்­லது முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனை­கின்­றார்­களா என்ற வினா எழுகின்றது.

நான்­கா­வ­தாக ஏனைய பிராந்­தி­யங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­ட­வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்ள பொலிஸார் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து அந்நியப்­பட்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர்.

இதனால் இவ்­வா­றான சம்­ப­வங்­களை முழு­மை­யாக தடுக்க முடி­ய­வில்­லையா என்ற சந்­தே­கமும் ஏற்­ப­டு­கின்­றது.

ஐந்­தா­வ­தாக ஏனைய பிர­தே­சங்­களை விடவும் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழும் பகு­தி­யான வடக்கில் இவ்­வா­றான சம்பவங்கள் அரங்­கேற்­றப்­ப­டு­வ­தனால் ஏற்­க­னவே முன்­வைக்­க­ப்பட்­டுள்ள இரா­ணு­வப்­பி­ர­சன்­னத்தை குறைக்கும் கோரிக்­கைக்கு பதி­லொன்றை வழங்க முடி­யு­மென்ற அடிப்­ப­டையில் திரை­ம­றைவு நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கமும் எழுகின்­றது.

ஆறா­­வ­தாக உள­ரீ­தி­யாக பல துன்­பங்­களை அனு­ப­வித்த தற்­போது அனு­ப­வித்­தாலும் அதனை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்த முடியாதிருக்கும்  மக்­களை மேலும் அச்­சத்தின் பால் நெருக்­க­டிக்­குள்­ளாக்­கு­வதால் அபி­லா­ஷைகள் தொடர்­பான கோரிக்­கை­களில் அதிக அக்­கறை காட்­ட­மாட்­டார்கள் என்­பதை பின்­பு­ல­மாக வைத்து இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­ற­னவா என்ற ஐயப்­பாடும் உள்­ளது.

இவற்­றுக்­கெல்லாம் மேலாக போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­ய­வர்கள் தமது பணத்­தே­வைக்­காக கொள்­ளை­களில் ஈடுபடுகின்­றார்­களா என்ற வினாவும்,  சினிமா பாணியில் தம்மை சமூ­கத்தில் ஹிரோக்­க­ளாக காட்­டு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் அடாவடித்த­னங்­களா என்ற வினாவும் எழாம­லில்லை.

இத்­தனை ஐயப்­பா­டான வினாக்கள் அடுக்­க­டுக்­காக எழு­கின்ற அதே­நேரம் வடக்கில் பண்­பாட்டு ரீதி­யாக வாழ்ந்து வரும் தமிழ் சமூகத்தின் மத்­தியில் இத்­தகைய நிலை­மைகள் எழு­கின்­ற­மை­யா­னது அந்த இனத்தின் எதிர்­கா­லத்தை மலி­னப்­ப­டுத்­து­வ­தற்கே வித்திடு­வ­தாக அமையும் என்­பது கண்­கூடு.

உரிமை வேட்கை தற்­போது வரையில் நிறை­வே­றா­தி­ருக்­கையில் அர­சியல், சமூக,  பொரு­ள­ாதார ரீதி­யாக எவ்­வ­ளவோ முன்னேற்றங்களை எட்­ட­வேண்­டி­யி­ருக்­கின்ற இன­மொன்று இவ்­வாறு சீர்­கு­லைந்த நிலைக்குள் சென்­று­கொண்­டி­ருப்­பதை ஏற்றுக்கொள்­ள­மு­டி­யாது.

ஆகவே அர­சியல் தலை­வர்கள், அதி­கா­ரிகள், சம­யத்­த­லை­வர்கள், சிவில் சமூகத்­தினர், புத்­தி­ஜீ­விகள், பெரி­யோர்கள், பெற்­றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் தமக்கான சமூகப்பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு சமூக சீர்குலைவை உடன் தடுத்து நிறுத்துவதற்கான இலக்கில் ஒன்றிணைவது அவசரமான அவசியமாகின்றது.

( ஆர்.ராம் )

Share.
Leave A Reply

Exit mobile version