பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழைமையான 50 தொன் நிறையுடைய போயிங் 767 விமானமொன்று அயர் லாந்தின் கொகிளேயர் எனும் இடத்திலிருந்து சிலிகோ பிராந்தியத்துக்கு கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படுவதை படத்தில் காணலாம்.

அந்த விமானத்தை தரை வழியாக குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதனால் அது வீதியிலுள்ள மின் இணைப்புகளுக்கு சேதம் விளைவிப்பதுடன் பெரும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் மேற்படி விமானம் 750 தொன் பாரந்தூக்கி உபகரணமொன்றின் மூலம் பாரிய படகு கட்டமைப்பில் வைக்கப் பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த படகுக் கட்டமைப்பு உரிய இடத்தைச் சென்றடைய 36 மணி நேரம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version