சி.எஸ்.என் தொடர்பான விசாரணைகளுக்கான யோஷித ராஜபக்ஷ இன்று நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் விசாரணைகளின் பின்னர் முச்சக்கர வண்டியில் திரும்பிச்சென்றார். இது பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
ஜனாதிபதி சாட்சியாக நீதி அமைச்சரின் மகனுக்கு திருமணம்
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் இரண்டாவது மகனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் ரக்கித ராஜபக்ஷவின் மகளுக்கும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் சாட்சியாக இருந்து திருமணம் முடித்து வைத்தனர்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாமல், யோசிதவிடம் தொடங்கியது விசாரணை
10-05-2016
கால்ட்டன் விளையாட்டு வலையமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, லெப்.யோசித ராஜபக்சவை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.
அதுபோன்று, சிறிலங்கா விமானப்படை விமானங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழு இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.
இந்த அழைப்புகளின் பேரில், மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களான நாமல் ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், இன்று விசாரணைகளுக்கு முன்னிலையாகினர்.
இவர்களிடம், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.