இலங்கையில் சிறுத்தைகள் கொல்லப்படுவது முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

150907101434_leopard_killed_yala_512x288_bbc_nocredit

கடந்த மூன்று வாரக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஏழு சிறுத்தைகள் பலியாகியுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் குறுகிய காலத்தில் அதிகம் சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது இதுவே முதல் முறை எனவும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள வனங்களில் சுமார் 800 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன என்று முன்னணி வனவிலங்கு மருத்துவரான விஜித பெரேரா பிபிசியிடம் தெரிவித்தார்.

காடுகளுக்கு தீ வைப்பது, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காடுகளை அழிப்பது ஆகிய காரணங்களால் தங்களது இருப்பிடத்தை இழக்கும் சிறுத்தைகள், மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் வருவதாகவும் அதன்போதே அதிகமாக அவை உயிரிழப்பதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர் புபுது வீரரத்ன பிபிசியிடம் கூறினார்.

இதனிடையே சிறுத்தைகள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அவற்றை கொல்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும் அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் கோரியுள்ளது.

அக்கரபத்தனை பகுதியில்  விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் இறந்த சிறுத்தை!!

 

அக்கரபத்தனை பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவு உட்கொண்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வன ஜூவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த சிறத்தை உயிரிழந்திருந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த நாய்களுக்கு விஷம் கலந்து உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தவிர்த்து கொள்வதற்காக இராணுவத்தினரை குறித்த பகுதிக்கு பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 மாதங்களில் மாத்திரம் 5 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்தில் 08.05.2016 அன்றும் 09.05.2016 அன்றும் சிறுத்தையின் உடல்கள் மீட்கப்பட்டது.

தங்களின் வீடுகளில் உள்ள செல்லப்பிராணிகளை சிறுத்தைகள் கொன்று உட்கொள்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தங்களையும் தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

 

n10

Share.
Leave A Reply

Exit mobile version