மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மூன்று பரீட்சாத்திகள் ஸ்மார்ட் கடிகாரத்தின் துணையுடன் மோசடியொன்றில் ஈடுபட்ட சம்பவம் பேங்கொக்கில் இடம்பெற்றுள்ளது.

பரீட்சாத்திகள் மூன்று பேரும்  சிறியளவிலான அதிநவீன கெமரா பொறுத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகளுடன் பரீட்சைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கெமராவின் தொழில்நுட்ப தந்திரங்களை பயன்படுத்தி வினாத்தாளை படமெடுத்து பலருக்கு  அனுப்பியதுடன் விடைகளை கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடி தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் தேர்வை ரத்து செய்துள்ளனர். அத்துடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகளுக்கு மீண்டும் தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது.

spy-glasses-used-to-cheat-on-medical-school-exams-100660190-large.idge

Share.
Leave A Reply

Exit mobile version