14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைதுசெய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் வௌிநாடு சென்றுள்ள நிலையில், அவர் தனது பாட்டியின் பொறுப்பில் இருந்துள்ளார்.

அவரது பாட்டி தினக் கூலிக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இந்தநிலையில், பாட்டி இல்லாத நேரம் சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அதன் பின்னரும் சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த விடயத்தை அறிந்த ஒருவர் தனது பெயரைக் குறிப்பிடாது சிலாபம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை என்பதோடு, சிலாபம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரத்தின் மேல் ஏறி கணவனும் கீழிருந்து மனைவி, பிள்ளைகளும் உண்ணாவிரதம்

11-05-2016
1709375250Untitled-115 வருடங்களாக தாம் இருந்த இடத்துக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மஹாவலி அதிகார சபையின் அதிகாரிகளால் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நபரொருவர் இன்று அதிகாலை மரத்தின் மேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அகுணுகொலபெலச மஹாவலி அதிகாரசபை அலுவலகத்தின் முன்னாலுள்ள 18 அடி உயரமான வேம்பம் மரத்தில் ஏறி இவர் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதோடு, அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஹூங்கம – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு தமது உரிமைகளை வென்றெடுக்க சாகும்வரை உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு, மரத்தின் மேலுள்ளவர் கையில் விஷ போத்தலை வைத்திருப்பதாகவும், தமது இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

15 வருடங்களாக குறித்த இடத்தில் தனது குடும்பத்தால் தெங்கு, பலா போன்ற நிலையான பயிர்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும், வயல் செய்வதாகவும், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை பெற்றுள்ளதாகவும், இந்தநிலையில் இந்த நிலத்துக்கான அனுமதிப் பத்திரத்தை கோரிச் செல்லும் போதெல்லாம், அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தாம் வாழ்ந்து வருவதாகவும், பள்ளி செல்லும் இரு சிறுவர்கள் உள்ள தனக்கும், கணவருக்கும் வேறு நிலங்கள் ஏதும் இல்லை எனவும், உண்ணாவிரதம் இருக்கும் குடும்பத் தலைவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது தாம் பயிர் செய்துள்ள நிலத்தில் தண்ணீர் வசதி வழங்கப்படவில்லை என கூறியுள்ள அவர், தண்ணீர் விநியோகத்திற்காக போடப்பட்டிருந்த குழாய்களும் கழற்றிச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே அந்த இடத்துக்கான பத்திரம், பயிர்களுக்கு தேவையான நீர் மற்றும் கழற்றிச் செல்லப்பட்ட குழாய்கள் ஆகியவற்றை பெற்றுத் தருமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version