பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு  பரிமாணங்களை தாண்டி இன்று அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது.

சூப்பர் ஸ்டார் நடித்த முத்து இங்கு மாபெரும் வெற்றி, ஜப்பான் ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் மீது உள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அம்புலி 3டி படத்தை இயக்கிய ஹரீஷ் நாராயாணன்- ஹரி ஷங்கர் இரட்டையர் இயக்கி, எம்.எஸ்.ஜி மூவீஸ் மற்றும் சங்கர் டிசழவாநசள தயாரிப்பில், எம்.பி.எல் கடைஅள  சார்பில் பி.எல்.பாபு நாளை வெளியிட இருக்கும் ‘ஜம்பு லிங்கம் 3 டி’ படம்  இந்திய ஜப்பான் உறவை மீண்டும் மேற்படுத்துகிறது.

அம்புலி 3டி, ஆ ஆகியப் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹரி  – ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கும் ‘ஜம்புலிங்கம் 3டி’ படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்து உள்ளனர்.

தயாரிப்பாளர் ஹரி ஜப்பான் கலாசார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானிய கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது.

3dஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும் பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒருப் பெரிய நகைச்சுவை படமாக இருந்து இருக்கும்.

இந்தப் படத்தின் கதை ஒரு இந்திய கிராமத்தில் ஆரம்பித்து ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான  படங்களே வெளி வருவது இல்லை என்றக் குறையை ஜம்புலிங்கம் 3 டி தீர்க்கும்.

இந்தப் படத்தை திரையிட  திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுப்போக்கை தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்தையும் காட்டுகிறது.

3 டி தொழில் நுட்பம் இருக்கிறது என்று எல்லா கதைக்கும் பயன்படுத்த முடியாது. அதற்கேற்ற கதை வேண்டும், ஜம்புலிங்கம் 3 டி படத்தில் அதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அதிக பெற்று இருக்கிறது’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version