நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் ஒன்றை தயாரித்து டுபாயில் அறிமுகம் செய்துள்ளது.

தங்க தகடுகளால் ஆன இந்தக் கார் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது.

நிஸானின் ஆர் 35 ஜி.டி.ஆர். (R35 GT-R.) மொடலான இது ஒரு பந்தய கார் ஆகும். இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும்.

டுபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஓட்டோ மெக்கானிக் டுபாய் – 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்தது.

681144222Car

Share.
Leave A Reply

Exit mobile version