முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபாய ராஜபக்ஸவை கொலை செய்ய முயற்சி செய்தது விடுதலை புலிகளே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவே குண்டை வெடிக்க வைத்துக் கொண்டார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த தினத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாகவே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையிலான நினைவு தூபியொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களை நினைவுகூரும் வகையில் நினைவு தூபியொன்று அமைக்க இதுவரையில் யாரும் அனுமதி கோரவில்லை.

அவ்வாறு கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் எந்தவொரு தூபியையும் அமைக்க இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

வடக்கில் புலிகளை நினைவுகூட இடமளியோம் – ருவான் விஜேவர்த்தன

ruwan-wijewardena-300x200வடக்கில் போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது என்றும், அதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துத் தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,

விடுதலைப்புலிகள் இயக்கம் அனைத்துலக மட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. அவர்களை சிறிலங்காவில் அழித்துள்ளோம்.

இந்தநிலையில், புலிகளை நினைவுகூர ஒருபோதும் இடமளிக்க முடியாது.

வரும் 18 ஆம் நாள், வடக்கில் புலிகளை நினைவுகூரும் வகையிலோ அல்லது புலிக்கொடி ஏந்தியோ, புலிகளின் தலைவர்களை நினைவுகூரும் வகையிலோ ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் போரில் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவுகூர முடியும். அதற்கு அரசாங்கம் தடையாக செயற்படாது.

அதேவேளை புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில், இராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வுப்பிரிவு என்பன செயற்பட்டு வருகின்றன.

வடக்கில் போரில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவுகூர நினைவுத்தூபி அமைக்க முடியும். ஆனால் புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது. அதற்கு அரசாங்கம் எந்த அனுமதியையும் வழங்காது” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றை (12-05-2016) செய்தி (தமிழில்… பார்வையிடுங்கள்).

Share.
Leave A Reply

Exit mobile version