திருப்பூர் மாவட்டம் வடக்கிபாளையம் பிரிவு போயர் காலனியை சேர்ந்த 36 வயதான குப்புசாமி தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை தனது மாமனாருக்கு அனுப்பியுள்ளார். மேலும் பலருக்கும் அனுப்புவேன் என தனது மனைவியை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் குப்புசாமியின் மனைவி 27 வயதான ஜோதி காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் திருப்பூர் குப்புசாமிக்கும், கோவை ஜோதிக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழைந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்னர் ஜோதி தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஜோதி தனது கனவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் நாங்கள் உல்லாசத்தில் இருக்கும்போது, என்னை, எனது கணவர் ஆபாசமாக அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
ஆனால் தற்போது கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வந்து விட்டதால், ஆத்திரத்தில் அவர் என்னுடைய அந்த ஆபாச வீடியோவை எனது தந்தையின் செல்போனுக்கு அனுப்பிவைத்து என்னை அவமானப்படுதியதுடன், மீண்டும் திருப்பூருக்கே வாவேண்டும், இல்லையானால் இந்த வீடியோவை இன்னும் பலருக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறி தொந்தரவு செய்கிறார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதி கூறியுள்ளார்.
ஜோதியின் புகாரின் அடிப்படையில் குப்புசாமியை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் அவரை, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.