இந்தி நடிகருடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் தீபக் திஜோரி இயக்கத்தில் ‘தோ லப்ஜான் கி கஹானி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக ரந்தீப் ஹுடா நடித்து வருகிறார். இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சி சமீபத்தில் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டது.

அப்போது, இருவரும் நெருங்கி உணர்வுப்பூர்வமாக நடிக்கும் காட்சியில் ரந்தீப் ஹுடா உணர்ச்சிவசப்பட்டு, காஜல் அகர்வாலை இறுக்கி அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துவிட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத காஜல் அகர்வால், அவரை விலக்கிவிட்டு தனது கேரவனுக்குள் சென்றுவிட்டார்.

இந்த காட்சி கேமராவிலும் பதிவாகிவிட்டது. ரந்தீப் ஹுடா, காஜல் அகர்வாலிடம் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

பின்னர், இயக்குனர் தீபக், காஜல்அகர்வாலிடம் சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காஜல் அகர்வால் அந்த காட்சியை நீக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து இயக்குனர் தீபக் கூறும்போது, காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் பெரிய ஸ்டாராக விளங்கி வருகிறார். அவர் இந்த மாதிரியான முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்து கிடையாது என்பது எங்களுக்கும் தெரியும்.

என்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பேன். அவர்கள் எந்த காட்சியில் நடித்தாலும் அந்த காட்சிக்கேற்ற உணர்ச்சி எல்லாம் அவர்களே தானாக கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்ப்பேன்.

அப்படித்தான், இப்படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகளில் ரந்தீப், இந்த மாதிரி நடந்துகொண்டார்.

இருப்பினும், காஜல் அகர்வாலிடம் இந்த காட்சியின் தன்மை குறித்து விளக்கிக் கூறியதும், அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டு, மீண்டும் வந்து இந்த முத்தக்காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

மற்றபடி, அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாங்கள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version