பிரித்தானியாவில், 89 வயதான Alice Swale’s என்னும் மூதாட்டியின் வீட்டில் நுழைந்து, அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிய Dwayne Hollingworth என்னும் இளைஞருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு மாத கால சிறை தண்டனை விதித்து Hull Crown நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

சம்பவத்தன்று முதுமை மறதியாலும், நீரிழிவு நோயலும் பாதிக்கப்பட்ட வந்த Alice Swale’s வீட்டில் தனியாக இருந்துள்ளார், அப்போது இறைச்சி விற்பனையாளர் என்று கூறி ஏமாற்றி Hollingworth நுழைந்துள்ளார்.

பின்னர், வீட்டில் தனியாக இருந்த அந்த மூதாட்டியை கொடூரமாக தாக்கி, அவர் அணிந்து இருந்த மோதிரங்கள் மற்றும் அவரின் பணப்பையை திருடி சென்றுள்ளார்.

அந்த வீட்டில் நடந்த சம்வம் அனைத்தும், Alice Swale’s பாதுகாப்பு கருதி அவர் மகன் Laurence பொருத்தியிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. இதைதொடர்ந்து Laurence பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, விசாரணை நடத்திய பொலிசார், சிசிடிவி வீடியோ உதவியுடன், திருடு போன மோதிரத்தை வைத்திருந்த Hollingworth-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த வழக்கை விசாரித்த Hull Crown நீதிமன்றம்,குற்றவாளிக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version