ஆஸ்திரேலிய டிவி நிருபரிடம் இரட்டை அர்த்தத்தில் பெசிக்கொண்ட கெய்ல், தற்போது இங்கிலாந்து நிருபரிடமும் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்பவர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை இரண்டாக பிரித்து பார்க்கக்கூடியவர்கள். கிரிக்கெட்டில் சீரியசாக இருக்கும் அவர்கள் வாழ்க்கையை மிகவும் சகஜமாக எடுத்துக்கொள்பவர்கள்.

அதிலும் கெய்ல் மிகவும் வித்தியாசமானவர். மைதானத்தில் அதிரடியாக விளையாடும் அவர், மைதானத்திற்கு வெளியில் சகஜமாக பேசும் தன்மை கொண்டவர். இதனால்தான் பிக்பாஷ் தொடரின்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளித்து மாட்டிக்கொண்டார்.

அதேபோல்தான் தற்போது இங்கிலாந்து பெண் நிருபரிடம் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் அணிக்காக விளையாடும் அவரை இங்கிலாந்து பத்திரிகை பெண் நிருபர் சார்லோட் எட்வர்ட்ஸ் பேட்டி கண்டுள்ளார்.

அப்போது செக்ஸ், பெண்கள் மற்றும் சமத்துவம் குறித்த கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் கெயில் பதில் அளித்துள்ளார்.

நிருபர் கேட்ட ஒரு கேள்விக்கு கெய்ல் பதில் அளிக்கையில் ‘‘என்னுடைய ‘பேட்’தான் உலகத்திலேயே மிக மிகப் பெரியது. இதை நீங்கள் தூக்க நினைத்தால் உங்களுக்கு இரண்டு கைகள் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம உரிமையை தாண்டி வளர்ந்துவிட்டனர். அதிக அளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அவர்களால் செய்ய முடிகிறது. ஜமைக்கா பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்.

பெண்கள் ஆண்களை மகிழ்விக்க வேண்டும். அதாவது ஆண்கள் வீட்டிற்கு வரும்போது, உணவை எடுத்து டைனிங் டேபிளில் தயாராக வைக்க வேண்டும்.

இது மிகவும் முக்கியம். மேலும், வீட்டில் வேலை இருந்தால் அதை பகிர்ந்து செய்வதில் அவர்தான் முதல் நபர்.

தற்போது எனக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு துணியை மாற்றுவேன். ஆனால் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்றதை செய்யமாட்டோன். அது நடக்காது.

நான் அழகாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பெண்கள் என் மீது சாய்வார்கள் என்று கெயில் கூறினார்.

பின்னர் அந்த நிருபர், நீங்களே ஒரு பெண் மீது சாய்ந்தால்…? என கேட்டார். இதற்கு பெருமூச்சுவிட்டபடி பதிலளித்த கெயில், ‘உங்களுடைய கேள்வியை பார்க்கையில் நீங்களே என்னை ஒரு வழி ஆக்கிவிடுவீர்களோ?’ என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியை சம்பந்தப்பட்ட பெண் நிருபர் இப்போது வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version