ராசிபுரம்:மீண்டும் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, ராசிபுரத்தில் அ.தி.மு.க., தொண்டர், தன் சுண்டுவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தற்போது அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 50; கட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவர், 35 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வில் தீவிர தொண்டராக இருந்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஜெ., மீண்டும் முதல்வரானால், ராசிபுரம் முனியப்பன் கோவிலில் தன் சுண்டு விரலை வெட்டி, உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டார்.

தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து, தன் வேண்டுதலை நிறைவேற்ற, ராசிபுரம் – நாமக்கல் சாலையில் உள்ள முனியப்பன் கோவிலில், நேற்று காலை 9:௦௦ மணிக்கு, தங்கராஜ் தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார்.

துண்டான விரல் கீழே விழாமல் தொங்கி கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், தங்கராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கிருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

…………………………………………………………..

நாக்கை, விரலை… வெட்டி  நேர்த்திக்கடன் செலுத்துவதைவிட  அம்மாவுக்காக  “தலையை வெட்டி”    நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தால்   இதைவிட கூடுதலான்   விளம்பரமும், கூடுதலான பணமும் (குடும்பத்தாருக்கு)  கிடைத்திருக்குமே!!

மடமைகள் மண்ணில் இருந்து என்ன செய்யப்போகிறார்கள்?

இதை கட்டாயம் பாருங்கள் நல்ல சுவாருஸ்யமான காட்சியுண்டு..

Share.
Leave A Reply

Exit mobile version