ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 15 வயதாவதற்கு முன்னரே இரண்டு லட்சம் பெண்கள் தாயாகின்றனர். இதனால் பெரும் சமூகப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன எனக் கவலைகள்.

160513170323_201601-bgd-01-lprஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தங்களுக்கு 15 வயதாவதற்கு முன்னரே இரண்டு லட்சம் பெண்கள் தாயாகின்றனர். இது அவர்களின் உடல்நலனை பாதிப்பது மட்டுமன்றி பல சமூகப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்திலுள்ள 14 வயதான கேயா வங்கதேசக் குடிசைப்பகுதி ஒன்றில் 21 வயதான தனது கணவர் ஜஹாங்கிருடன் வாழ்ந்து வருகிறார்.

பெற்றோரின் விருப்பத்தை மீறி 13 வயதானபோது காதல் திருமணம் செய்துகொண்டார் கேயே. பேறு காலத்தில் ஏற்பட்ட ரத்த இழப்பு காரணமாக அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு அதிலிருந்து மீண்டார்.


ஆனாவுக்கு வயது 15. தனது மகள் கேரன் மற்றும் பெற்றோர், இரண்டு சகோதரிகள் ஆகியோருடன் கொலம்பியாவின் பெரிய நகர் ஒன்றில் அடிக்கடி வன்முறைகள் ஏற்படும் பகுதியில் அவர் வாழ்கிறார்.

அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கர்ப்பமுற்றார். பின்னர் அவரது ஆண் நன்பர் விலகிவிட்டார். அவர் எட்டுமாத கர்ப்பமாக இருந்தபோது பெரும் மருத்துவ நெருக்கடிக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டார்.

இனி தாய்மையே வேண்டாம் எனும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். ஆனாலும் கேரனை மிகவும் நேசிக்கிறார்.

புர்கினா ஃபாஸோவில் 13 மாத குழந்தையான ஃபாட்டியுடன் வசிக்கிறார் அயீஷா. அவருடன் இரண்டு சகோதரிகளும் தாயும் உள்ளனர். அவரது ஆசிரியரால் பாலியல் வன்முறைக்கு ஆளான ஆயிஷா கருவுற்றார்.

ஆசிரியர் ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆரம்பக் கல்வி முடிந்த நிலையில் 14 வயதில் அவரது ஆசிரியரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி கர்ப்பமானார். பள்ளிப்படிப்பு அத்துடன் நின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஹைத்தியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்தோருக்கான முகாமில் தங்கியுள்ளார் எலைன்.

முகாமில் காதல், அதனால் கர்ப்பம். ஏழு மாதங்களில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால் அந்தக் குழந்தையின் ஆயும் விரைவில் முடிந்தது.

மருத்துவமனையில் தாய் அல்லது சேய் யாராவது இறக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியதை அவர் நினைவுகூறுகிறார்.

ஜோர்டானில் அகதிமுகாம் ஒன்றில் வசிக்கும் அமீராவுக்கு இரண்டு குழந்தைகள். சமீருக்கு ஒரு வயது, அமால் பிறந்து சில நாட்களே ஆகின்றன.

கணவரும் அதே முகாமில் உள்ளார். தமது சொந்த நாடான சிரியாவில் இடம்பெறும் போர் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை அமீராவுக்கு.

முகாமுக்கு வந்த பிறகு 13 வயதில் திருமணம். அங்கேயுள்ள மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அமீரா அவர்களை பேணுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார்.

கணவரையும் கவனிக்க வேண்டிய நிலையில், என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிறார் அமீரா.

Share.
Leave A Reply

Exit mobile version