வியட்நாம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அங்குள்ள சராசரி உணவகத்தில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட சம்பவம் வியட்நாம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

201605241430078608_Obama-dines-in-average-vietnam-hotel_SECVPF.gif

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, நகைச்சுவையாக பேசுவது மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே ஜோக் அடிப்பது, சிறுசிறு குறும்புகள் செய்வதுடன் அந்த சுவாரஸ்யமான காட்சிகளை இணையதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வியட்நாம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒபாமா, அந்நாட்டின் தலைநகரான ஹனாய்யில் உள்ள சிறிய உணவகத்திற்கு சென்றார்.

ஹனாய் நகரிலேயே அந்த கடையில்தான் நூடுல்ஸ் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், ஒபாமாவை இந்த உணவகத்திற்கு அந்தோணி போர்டைன் அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல சமையல்காரரான அந்தோணி போர்டைனுடன் அமர்ந்து, பியர், சாதம், நூடுல்ஸ், சூப் போன்றவறை சாப்பிட்டுள்ளார்.

இந்த உணவகத்தில் அமர்ந்து ஒபாமா சாப்பிடுவதற்கு எவ்வித இட ஒதுக்கீடு மற்றும் அவரை வரவேற்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஒபாமாவை அங்கு கண்டதும் உள்ளூர் மக்கள் ஆவலுடன் ஓடிவந்து அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

மிகவும் சாதாரணமாக அந்த உணவகத்திற்குள் சென்ற ஒபாமா, நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, உணவருந்தும் காட்சியினை, அந்தோணி போர்டைன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version