அநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மகளின் கணவனே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலையை மேற்கொண்டுள்ளார்.

நிஷானி இஷாரா மல்ஷானி வாசனா என்ற 20 வயது பெண்ணே உயிரிழந்தவராவார். அவர் இரண்டு வயது பிள்ளையொன்றின் தாயாவார்.

அவரது கணவனின் வயது 24 என்பதுடன் அவரது பெயர் ஆசிரி ரொமேஷ்.

சந்தேகநபர் கொலையின் பின்னர் விஷமருந்திய நிலையில் கலேன்பிந்துனுவெவ நீர்த்தேக்கத்தின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

சம்பவ தினமான கடந்த 25 ஆம் திகதியன்று ஆசிரி விருந்தொன்றுக்கு சென்று குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து இஷாரவுக்கும் , ஆசிரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் இதன்போதே சந்தேகநபர் தனது மனைவியை பாண் வெட்டும் கத்தியால் 5 தடவை குத்தியுள்ளார்.

வயிறு மற்றும் நெஞ்சிலேயே அவர் குத்தியுள்ளதுடன் , மகளை காப்பாற்ற முயற்சித்த தாயையும் சந்தேகநபர் 3 தடவை நெஞ்சில் குத்தியுள்ளார்.

அலறல் சத்த த்தைக் கேட்டு இஷாராவின் சகோதரி அங்கு வந்துள்ளதுடன், பெண்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதப்பதையும் ,சந்தேகநபர் முறைத்துக்கொண்டு வெளியே செல்வதையும் கண்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த அயலவர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட பெண்ணின், இரண்டு வயது மகள் மோட்டார்சைக்கிளின் பின்னால் பயத்தில் ஒளிந்து இருப்பதையும் அயலவர்கள் கண்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் இஷாரா உயிருடனேயே இருந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயார் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

காதல் தொடர்பை அடுத்தே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சந்தேகநபர் நீண்ட நாட்களாக தொழில் எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.

குடும்ப பிரச்சினையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என தெரியவருகின்றது.<

Share.
Leave A Reply

Exit mobile version