யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது!
இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது.
அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது.
அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர்.
தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது. இதைப் பார்க்கும் பொழுது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தான் ஞாபகம் வரும்.
“இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!”.
பிற்குறிப்பு: அச்சுவேலி கிராமத்தில் வாழும் ஒருவர் முகநூலில் தெரிவித்த தகவலை அடிப்படையாகக் வைத்து எழுதி இருக்கிறேன்.
சாதாரண மக்களும் தகவல் தெரிவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மட்டுமே உள்ளன.
அதனால் தான் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கையில் உள்ள தமிழ் வணிக ஊடகங்களும், பெரும்பாலான தமிழ் இணையத் தளங்களும், ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவர்கள் ஒன்றில் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது அங்கு நடந்த சம்பவத்திற்கு சாதிப் பிரச்சினை தான் காரணம் என்பதை மட்டும் தணிக்கை செய்து விட்டு வெளியிடுவார்கள்.
–கலையரசன்-
http://kalaiy.blogspot.ch/2016/07/blog-post_24.html