“எத்­தனை காலம் தான் ஏமாற்­றுவார் இந்த நாட்­டிலே, இந்த வீட்­டிலே, உத்­தமன் போலவே நடிக்­கி­றார்கள்” என்ற தமிழ் பாடல் வரி­களும், “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்­ப­டுவான்” என்ற பழ­மொ­ழியும் இன்­றைய தமிழக அர­சி­யலை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஆம். தமி­ழக முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி எத்­தனை நாள் தான் மக்­களை ஏமாற்­றுவார். உத்­தமன் போல் நடிக்­க­மு­டி­யாது என்பதை இன்று உணர்த்தி விட்டார்.

எந்த நாளும் உத்­தமன் போல் நடிக்க முடி­யாது. ஒரு நாளைக்கு ‘உத்­தமன் ‘ வேஷம் கலைந்து விடும். இன்று வேஷம் கலைந்து விட்­டது. பல நாள் திரு­டனின் தில்­லு­முல்­லுகள் இன்று அம்­ப­ல­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

எப்­ப­டி­யா­வது எதிர்­வரும் 4 ஆண்­டுகள் ஆட்சி நடத்த வேண்டும், தமது கொள்­கை­க­ளையும் பத­வி­க­ளையும் பாது­காத்துக் கொள்ள வேண்டும் என்­பதே எடப்­பா­டி­யி­னதும், அமைச்­சர்­க­ளி­னதும் எண்­ண­மாகும். கனவில் கூட முத­ல­மைச்­ச­ராக முடி­யாத எடப்­பாடி சசிகலாவின் ஆத­ர­வினால் அவ­ரது பினாமி முத­ல­மைச்­ச­ரானார்.

இன்று அக்­கட்­சியின் சுகங்­களை அனு­ப­வித்த அவ­ருக்கு அதனை விட்டு விலக மன­மில்லை. ஆனால் தமி­ழக சட்ட சபை அமைச்­சர்­களும் எம். பி.க்­களும் அவரது கட்டுப் பாட்டில் இல்லை.
…………………………………………………………………………………….

 உத்­தமன் போல் நடிப்ப வர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.

 வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை ஏமாற்று வித்­தைக்கு முடிவு கட்ட வேண்டும்.

 திற­மை­யா­னவன் அடை யாளம் காணப்பட வேண்டும்.

…………………………………………………………………………………………

அமைச்­சர்­க­ளான உத­ய­குமார், திண்­டுக்கல் சீனி­வாசன் உட்­பட பலர் தத்­த­மது கருத்­துக்­களை சுதந்­தி­ர­மாக கூறு­கின்­றனர். முதலமைச்சரை மதிப்­பதே இல்லை.

சசி­க­லாவின் பினாமி முத­ல­மைச்­ச­ரான எடப்­பாடி இன்று மத்­திய பார­திய ஜனதா கட்­சி­யு­டனும், பிர­தமர் மோடி­யு­டனும் நெருங்­கிய தொடர்­பு­களைப் பேணியும் தமது பத­வி­யையும் ஆட்­சி­யையும் பாது­காக்க அனைத்து வழி­க­ளையும் பின்­பற்றி வரு­கிறார்.

தேசப்­பற்று என்­பது அயோக்­கி­யனின் இறுதி புகலிடம் என்­பது முது­மொழி. அத­னைத்தான் இன்று இலங்­கையில் பல அர­சி­யல்­வா­திகள் தமது “பிழைப்­பாக” நடத்­து­கின்­றனர்.

ஆனால் பிர­தமர் நரேந்­திர மோடி உண்­மை­யான உள்­ளத்­துடன் சிறந்த தேசப்­பற்­றாளன். இன்று ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் கழிந்து விட்ட நிலை­யி­லேயே தமிழ்நாட்டில் வரு­மா­னத்­துறை சோத­னைகள், ஊழல் மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்­பட்­டுள்­ளன.

இதனை அர­சியல் பழி­வாங்கல் என்று கூற­மு­டி­யாது. நாட்­டுக்கு செலுத்த வேண்­டிய வரியை செலுத்­தாது ‘ஏப்பம்’ விட்டு வரு­மா­னத்தை விட அதிக சொத்­துக்­களை சேர்த்து பலர் திடீ­ரென பணக்­கா­ரர்­க­ளாகி உள்­ளனர். இது எப்­படி சாத்­தி­ய­மாகும் என்­பதை விசா­ரணை நடத்த வேண்­டி­யது அரசின் கடப்­பா­டாகும்.

இவ்­வ­ளவு காலமும் ஜெயாவின் மரணம் வரை தமி­ழ­கத்தின் ஊழல் மோச­டிகள் வரு­மா­னத்தை விட அதிக சொத்­துக்­களை சேர்ப்­பது இரும்புத் திரை போட்டு மறைக்­கப்­பட்­டது. இன்று இரும்­புத்­திரை வில­கி­யுள்­ளது. வரு­மான வரித்­துறை சோத­னைகள் ஆரம்பமாகியுள்ளன. இது தான் உண்மை.

ஊரி­லி­ருந்து ஒரு­ச­த­மேனும் இல்லாது பிச்­சைக்­கா­ரர்­க­ளாக அ.தி.மு.க.வில் இணைந்து அமைச்­சர்­க­ளா­ன­வர்­க­ளுக்கு இன்று பல வீடுகள், வாக­னங்கள் ஏன் பொண்­டாட்­டி­களும் இரண்டு பேர். திடீ­ரென பணம் கொட்ட ஆரம்­பித்­துள்­ளது. இது எப்­படி சாத்­தி­ய­மாகும்?

சுகா­தார அமைச்சர் விஜ­ய­பாஸ்­கரின் வீடு பல­முறை சோதனை செய்­யப்­பட்­டது. அவ­ரது மனைவி ரம்­யா­வி­டமும் விசா­ர­ணைகள் நடத்தப்­பட்­டன.

அவர் பல கம்­ப­னி­க­ளுக்கு தலை­வ­ராக பதவி வகித்து வரு­வது தொடர்­பா­கவும் விசா­ரிக்­கப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக நடி­கர் சரத்குமார், ராதிகா ஆகி­யோ­ரி­டமும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன.

இன்று முன்னாள் நிதி­ய­மைச்சர் சிதம்­பரம் அவ­ரது மகன் கார்த்திக் சிதம்­ப­ரத்­தி­டமும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. இவ் விசாரணைகளில் பல உண்­மைகள் வெளி­யாகி இருப்­ப­தா­கவும் விரைவில் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­படும் எனவும் அறி­விப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் சசி­க­லாவின் பினாமி எடப்­பாடி பழ­னிச்­சாமி மீதும் வரு­மா­னத்தை விட அதிக சொத்து சேர்த்­த­தா­கவும் ஊழல் மோசடிகளில் தன்னை ஈடு­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு புறச் சூழ­லி­லேயே தன்னை முத­ல­மைச்­ச­ராக்­கிய சசி­க­லாவை விட்டு பிரிந்து மோடி­யுடன் சாய்­வ­தற்கும் தாஜா பணணு­வ­தற்கும் எடப்­பாடி நிகழ்ச்சி நிரலை தயார் செய்து முன்­னெ­டுத்து வரு­கிறார்.

இந்தக் கொள்­கையை பல அமைச்­சர்­களும் எம்.எல்.ஏ. க்களும் ஆத­ரிக்­கின்­றனர். எடப்­பா­டிக்கு சாமரம் வீச ஆரம்­பித்­துள்­ளனர். இதனை அறிந்து கொண்ட சசி­கலா தனக்கு ஆத­ர­வாக முன்னாள் அமைச்­சர்கள் இரு­வ­ரையும் எம்.எல்.ஏக்­க­ளையும் ஆட்­சி­யி­லி­ருந்து வேறுபடுத்தி­யுள்ளார்.

அண்­மையில் இந்த 11 பேரும் தனி­யாக சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். எடப்­பா­டிக்கு எதி­ராக போர்க்­கொடி உயர்த்தியுள்ளனர். அதே­வேளை, அ.தி.மு.க வின் பிர­மு­க­ரான நாஞ்சில் சம்பத் எடப்­படி – மோடி நட்­பு­ற­வுக்கு போர்க்­கொடி உயர்த்தியுள்ளார்.

டி.டி.வி. தின­கரன் தான் அ.தி.மு.க வின் விடி­வெள்ளி, சசி­க­லாதான் பாது­கா­வலர். அவர்கள் பொதுச்­செ­ய­லாளர், இணைப் பொதுச்செயலாளர் பத­வி­யினை வகிக்க வேண்டும் என ஆணித்­த­ர­மாக கூறு­கின்­றார்.

இவ்­வாறு ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தின் பின்பு அ.தி.மு.கவினர் எடப்­பாடி, சசி­கலா, பன்னீர், நாஞ்சில் சம்பத் என பல பிரி­வு­க­ளாக பிரிந்து செயற்­ப­டு­கின்­றனர் என்று தான் கூற­வேண்டும்.

அ.தி.மு.க. வில் பிள­வுகள் இல்லை, பிள­வுகள் இல்­லை­யென்று எவர் கூறி­னாலும் பிள­வுகள், பிரி­வுகள் உள்­ளன என்­ப­துதான் உண்மை. இது எதிர்­கா­லத்தில் அ.தி.மு.க.வை பல­வீ­ன­மாக்­கி­விடும். அப்­போது தமிழ்­நாட்டில் ஏனைய கட்­சிகள் தலை­தூக்கும் வாய்ப்­பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தமிழ்­நாட்டில் இன்று அ.தி.மு.க.வின் அர­சியல் கோட்டை சரிந்­து­கொண்­டி­ருப்­பது தான் உண்மை. தமது பதவி, சேர்த்து வைத்த சொத்துக்கள், நான்கு வருட ஆட்­சியைத் தொட­ரு­வதே எடப்­பாடி உட்­பட தமி­ழக அரசின் கொள்­கை­யாக உள்­ளது.

தமி­ழ­கமோ, மக்­களின் நலமோ அவர்­க­ளுக்கு கொஞ்­ச­மேனும் கிடை­யாது. மக்­க­ளையும், தமிழ்­நாட்­டையும் மறந்து அரசு செயற்படுகிறதென்­பதை தமி­ழக மக்கள் நன்­க­றி­வார்கள். எனவே, வெள்­ளை­வேட்டி, வெள்ளை சட்டை அணிந்­து­கொண்டு தமிழ்­நாட்டை கொள்­ளை­ய­டிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­காது தடை­போட வேண்டும்.

வரு­மா­னத்­தை­விட அதிக சொத்­துக்­களை சேர்த்தோர் கைது­செய்­யப்­பட வேண்டும். சொத்­துக்­களைப் பறித்து பொது­மக்­க­ளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உத்­தமன் போல் நடித்து பொது சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிப்­போரை உள்ளே சிறையில் தள்ள வேண்டும்.

ஏமா­று­பவன் இருக்கும் வரை ஏமாற்­று­ப­வனின் வேலைகள் தொடர்ந்­து­கொண்­டேதான் இருக்கும். எடப்­பாடி பழ­னிச்­சாமி குழு­வினர் மத்திய அரசை ஏமாற்றும் கைங்­க­ரி­யத்தில் ஈடு­பட்­டு­வரும் நிலையில் ஓ.பன்­னீர்­செல்வம் திடீ­ரென டில்லி பறந்­துள்ளார். பிர­த­மரை சந்திக்­கிறார், தேர்தல் ஆணை­யா­ளரை சந்­திக்­கிறார்.

இதன்­பின்னர் என்ன மாறு­தல்கள் இடம்­பெறும் என்­பது தெரி­யாது. எது எப்­ப­டியோ ஏமாற்­று­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து தமி­ழ­கத்­தையும், தமிழர்களையும் காப்­பாற்ற வேண்டும். பிர­தமர் மோடி டில்­லிக்கு மட்­டு­மல்ல, தமிழ் நாட்­டுக்கும் பிர­த­ம­ராவார். எனவே, தமி­ழ­கத்தின் எதிர்­காலம் கருதி தீர்­மானம் எடுக்­க­வேண்டும்.

தமி­ழக தலை­வர்­களின் தனிப்­பட்ட ஆசா­பா­சங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள இன்று ஆட்­சி­யா­ளர்கள் அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்கொண்டு வரு­கின்­றனர். எனவே, சட்ட சபை கலைக்­கப்­பட்டு உட­ன­டி­யாக தேர்தல் நடத்­தப்­பட வேண்டும்.

இதுவே தமிழ்நாட்­டுக்­கான தீர்­வாகும். இதனை மிஞ்­சிய தீர்­வெ­துவும் கிடை­யாது. பல்டி அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும். உண்­மை­யான அர­சி­ய­லுக்கு முன்­னு­ரிமை வழங்­க­வேண்டும். உத்­த­மர்கள் போல் நடித்து மக்­களை ஏமாற்­று­ப­வர்கள் அடை­யாளம் காட்டப்­பட வேண்டும்.

எடப்­பா­டியின் அரசு நிலை­யா­னது அல்ல. அது பொய்­யான டம்மி அரசு. இது கலைக்­கப்­ப­ட­வேண்டும். இல்­லா­விட்டால் தமி­ழ­கத்­துக்கு விமோ­சனம் கிடைக்­கப்­போவ­தில்லை.

முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா அவரது கொள்கைகளை முன்னெடுப்போம் என ஜெயாவின் புகழ்பாடுகின்றனர்.

ஆனால், ஆரம்பத்திலேயே ஜெயாவின் கொள்கைகளை அவர்கள் மீறி செயற்படு­கின்றனர். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் அரசியலுக்கு வரக்கூடாது என ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. ஆனால், இன்று அக்கொள்கையை மீறியே அனைவரும் செயற்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் இவர்கள் அம்மாவை பின்பற்றுவார்களா என நம்பிக்கையுடன் கூறமுடியுமா? எடப்பாடியின் அரசு இன்று ஆட்டம் கண்டுள்ளது. ஓ.பி.எஸ். டில்லி பயணம் மேற்­கொள்கிறார். எதிர்காலம் என்ன என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றுபவர்கள் நீண்ட காலம் நிலைத் திருக்க மாட்டார்கள் என்பது உறுதியாகும். அவர்கள் இறைவனால் தோல்வியடையச் செய்யப்படுவார்கள்.

-ப.பன்னீர் செல்வம்-

Share.
Leave A Reply

Exit mobile version