ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம்

இலங்­கையில் தமது செல்­வாக்கை அல்­லது தலை­யீ­டு­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதில், சீனாவும் இந்­தி­யாவும், கடு­மை­யான போட்டியில் தான் குதித்­தி­ருக்­கின்­றன என்­பதை இரண்டு நாடு­க­ளி­னதும் அண்­மைய நகர்­வுகள் தெளி­வாக உணர்த்தி வரு­கின்­றன.

ஒன்­றுக்கு ஒன்று சளைக்­கா­மலும், விட்டுக் கொடுக்­கா­மலும், நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­வதைக் காண முடி­கி­றது.

இலங்­கையில் பொரு­ளா­தார ரீதி­யான தலை­யீ­டு­களை மாத்­தி­ர­மன்றி, அதனை தமது பாது­காப்பு நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்வதற்கும் பயன்­ப­டுத்தி வரும் சீனா­வுக்கு இந்­தி­யாவும் கடு­மை­யான போட்­டியைக் கொடுத்து வரு­கி­றது.

இத்­த­கைய தரு­ணத்தில், இந்­தி­யாவின் எதிர் நகர்­வு­களைத் தோற்­க­டிக்கும் நகர்­வு­க­ளுக்கு சீனாவும் விடாப்­பி­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கைப்­பற்­றிய சீனா­வுக்குப் பதி­ல­டி­யாக, மத்­தல விமான நிலை­யத்தை வளைத்துப் போடும் இந்தியாவின் நகர்வு அமைந்­தி­ருந்­தது.

மத்­தல விமான நிலையம் தொடர்­பாக, இந்­திய அதி­கா­ரிகள், கொழும்பில் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில், சீனத் தூதுவர் செங் ஷி யுவான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­திக்கச் சென்­றி­ருந்தார். இது நடந்து கிட்­டத்­தட்ட மூன்று வாரங்களாகி விட்­டன.

பொலன்­ன­று­வவில், சிறு­நீ­ரக நோய்க்குச் சிகிச்சை வழங்கும் முழு வச­தி­க­ளையும் கொண்ட மருத்­து­வ­மனை ஒன்றை அமைக்கும் திட்டத்­துக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வுக்­கான இறு­திக்­கட்ட ஒழுங்­குகள் பற்றிக் கலந்­து­ரை­யா­டு­வதே சீனத் தூது­வரின் வெளிப்படையான நோக்கம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சீனா­வுக்குச் சென்­றி­ருந்த போது, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்­கிடம் விடுக்­கப்­பட்ட கோரிக்கைக்கமைய, பொலன்­ன­று­வவில் இந்த மருத்­து­வ­ம­னையை அமைத்து தரு­வ­தாக சீனா உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இந்த திட்­டத்­துக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி பொலன்­ன­று­வவில் நடை­பெற்­றது. அந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சீனத் தூதுவர் செங் ஷியு­வானும் பங்­கேற்­றி­ருந்தார்.

இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றிய போது தான், அந்த விட­யத்தை வெளியே உடைத்துப் போட்டார்.

அதா­வது மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், சீனத் தூதுவர் தனது இருப்­பி­டத்­துக்கு காவி வந்த செய்தி தான் அது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார்.

அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம் என்­பது தான், சீனத் தூதுவர் காவிச் சென்ற செய்தி.

சீன ஜனா­தி­பதி வழங்க முன்­வந்­தது ஒன்றும் கடன் அல்ல, திருப்பி செலுத்தத் தேவை­யில்­லாத நன்­கொடை அது. அதுவும் சாதா­ர­ண­மான அளவு அல்ல. 2 பில்­லியன் யுவான் என்­பது, கிட்­டத்­தட்ட 295 மில்­லியன் டொல­ருக்குச் சம­மா­னது. இலங்கை ரூபாவில், சுமார் 4800 கோடி.

பொது­வாக, நாடு­களின் தலை­வர்­களின் பய­ணங்­களின் போது தான் இந்­த­ளவு பெரிய நன்­கொ­டைகள் பற்­றிய அறி­விப்­புகள் வெளியிடப்படு­வது வழக்கம்.

ஆனால், சீன ஜனா­தி­பதி, அத்­த­கைய எந்தப் பய­ணங்­களும் இடம்­பெ­றாத சூழலில், இந்த நன்­கொ­டையை அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரியம்.

இரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் பற்­றிய விவா­தங்கள் நடந்து கொண்­டி­ருந்த சூழலில் தான், சீன ஜனா­தி­ப­தியின் இந்த அறி­விப்பு வெளியா­னது.

முத­லா­வது மத்­தல விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுடன், இணைந்து இயக்­கு­வது தொடர்­பான பேச்­சுக்கள் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த சூழல்.

இரண்­டா­வது, கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது, மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு சீன நிறு­வனம், 7.6 மில்­லியன் டொலரை வழங்­கி­யது என்ற குற்­றச்­சாட்டு சூடு பிடித்­தி­ருந்த சூழல்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சீன நிறு­வ­னத்­திடம் நிதி பெற­வில்லை என்று பாரா­ளு­மன்­றத்தில் அடித்துச் சொல்லும் திராணி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்­லாத நிலையில், இந்த விவ­கா­ரத்தை இனி­மேலும் தோண்டிக் கொண்­டி­ருக்கக் கூடாது என்ற சமிக்­ஞையை கொழும்­புக்கு வெளிப்­ப­டுத்தும் நோக்கில் தான், இந்த 4800 கோடி ரூபா நன்­கொடை அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது என்ற பர­வ­லான ஒரு கருத்து உள்­ளது.

அதா­வது. மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது, அவ­ருக்கு மாத்­திரம் நன்­கொ­டை­களை வழங்­க­வில்லை, தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கும் கூட அத்­த­கைய நன்­கொ­டைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று கணக்கை சமப்­ப­டுத்தும் யுக்­தி­யா­கவும் இதனைப் பார்க்­கலாம்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள 4800 கோடி ரூபா நன்­கொடை, அவ­ரது தனிப்­பட்ட அல்­லது தேர்தல் செல­வுக்­காக அளிக்­கப்­பட்ட ஒன்று அல்ல. நாட்டின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் ஏதா­வது ஒன்­றுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக அறி­விக்­கப்­பட்­டது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும், 7.6 மில்­லியன் டொல­ருக்கு என்ன நடந்­தது என்று யாருக்கும் தெரி­யாது. அது­பற்­றிய அர­சாங்க கணக்கு வழக்­கு­களும் கிடை­யாது.

இங்கு, ஒன்றை மறைக்க இன்­னொன்றைத் தூக்கிப் போடும் யுக்­தியை சீனா கையாண்­டி­ருக்­கலாம். ஆனால், இது­மாத்­திரம் தான் சீனாவின் திட்டம் என்று எவ­ரேனும் கரு­தினால் அது தவ­றா­னது. அதற்கு அப்­பாலும் நோக்­கங்கள் இருந்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

இந்த நன்­கொடைப் பொதி­யுடன், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­திக்க சீனத் தூதுவர் சென்­றி­ருந்த போது தான், இந்­திய அதி­கா­ரிகள் குழு மத்­தல விமான நிலையம் தொடர்­பாக, கொழும்பில் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருந்­தது.

மத்­தல விமான நிலை­யத்தின் 70 வீத பங்­கு­களை இந்­தியா கொள்­வ­னவு செய்­வ­தென்ற அடிப்­ப­டையில் இந்த பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இவ்­வாறு இரண்டு நாடு­களும் பங்­கு­களைப் பிரித்துக் கொள்­வ­தற்­காக, மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­தியை மதிப்­பீடு செய்­தி­ருந்­தன. இலங்கை அர­சாங்­கத்தின் மதிப்­பீ­டு­களின் படி, மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­மதி 326 மில்­லியன் டொலர் என்று பிரதி அமைச்சர் அசோக அபே­சிங்க கூறி­யி­ருந்தார்.

இதன்­படி பார்த்தால், 70 வீத பங்­கு­க­ளுக்­காக இந்­தியா, 228 மில்­லியன் டொலரை வழங்க வேண்­டி­யி­ருக்கும்.

ஆனால், இந்­திய விமான நிலைய அதி­கா­ர­சபை இந்த மதிப்­பீட்டை ஏற்­க­வில்லை. அவர்­களின் மதிப்­பீட்டின் படி, விமான நிலை­யத்தின் பெறு­மதி 293 மில்­லியன் டொலர் தான்.

இந்தப் பேச்­சுக்கள் இன்­னமும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இறு­தி­யான முடிவு இன்­னமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இதற்கும், மத்­தல தொடர்­பாக எந்த திட்­டத்­தையும் ஆலோ­சிக்­க­வில்லை என்று வேறு இந்­தியா மற்­றொரு குண்டைத் தூக்கிப் போட்­டி­ருப்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

இங்கு, ஆச்­ச­ரி­ய­மான வகையில், ஒரு விடயம் இருக்­கி­றது. அதா­வது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­ப­தி­யினால் அறி­விக்­கப்­பட்ட 295 மில்­லியன் டொலர் நன்­கொ­டையும், இந்­திய விமான நிலைய அதி­கார சபை­யினால், மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­தி­யாக மதிக்­கப்­பட்ட, 293 மில்­லியன் டொல­ருடன் கிட்­டத்­தட்ட சம­மாக இருக்­கி­றது.

அவ்­வா­றாயின், இந்த நன்­கொ­டையைக் கொடுத்து, மத்­தல விமான நிலையம் கைமாற்­றப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு சீனா எத்­த­னித்­ததா – இன்­னமும் எத்­த­னிக்­கி­றதா என்ற கேள்­விகள் உள்­ளன.

முன்­ன­தாக, சீனா, மத்­தல விமான நிலை­யத்­துக்­காகப் பெறப்­பட்ட கட­னுக்­கான வட்­டியை தள்­ளு­படி செய்­யு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கோ, வட்டித் தொகையை குறைக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கோ செவி சாய்க்­க­வில்லை.

இந்த விவ­கா­ரத்­தினால் சீன அதி­கா­ரி­க­ளுக்கும், நிதி­ய­மைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கும் இடையில், பகி­ரங்க வாதப் பிர­தி­வா­தங்­களும் இடம்­பெற்­றன.

ஆனால், இது வர்த்­தக கடன், இரண்டு நாடு­களும் இணங்கிப் பெற்ற கடன். அதில் எந்த தளர்­வுக்கும் இட­மில்லை. அவ்­வாறு கேட்­பதும் நியா­ய­மில்லை என்று சீனா உதா­சீனம் செய்­தி­ருந்­தது.

இப்­போது, சீனா மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­திக்கு இணை­யான நன்­கொ­டையை வழங்க முன்­வந்­தி­ருக்­கி­றது. அதுவும், ஜனா­தி­பதி விரும்பும் ஏதா­வது ஒரு திட்­டத்­துக்கு அதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்றும் ஒரு தூண்­டிலைப் போட்­டி­ருக்­கி­றது.

இருந்­தாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த நன்­கொ­டையை மத்­தல விமான நிலை­யத்­துக்குப் பெறப்­பட்ட கடனைத் தள்­ளு­படி செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்தப் போவ­தாக கூற­வில்லை.

அதனை, வீட­மைப்புத் திட்டம் ஒன்­றுக்குப் பயன்­ப­டுத்த அவர் முடிவு செய்­தி­ருக்­கிறார். இந்தக் கொடையை மத்­தல விமான நிலை­யத்தின் கடனை அடைப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தினால், எதுவும் தேறாது.

ஏனென்றால், மத்­தல விமான நிலையம் இப்­போ­தைக்கு வரு­மானம் தரும் ஒன்­றாக மாறும் சாத்­தி­யங்கள் இல்லை.

ஆனால், தலா 10 இலட்சம் ரூபாவில் வீடு­களை அமைத்துக் கொடுக்கும் திட்­டத்தில் இதனை முத­லீடு செய்தால், 48,000 பேருக்கு வீடு­களைக் கட்டிக் கொடுக்கலாம். அந்த வகையில், இது புத்திசாலித்தனமான முடிவு தான்.

ஆனால், இந்தியா இந்த நன்கொடையை குழப்பத்துடன் நோக்குகிறது. தனக்குப் போட்டியாக- இலங்கையை வளைத்துப் போடுவதற்கு சீனா தனது நிதியைப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற ஆதங்கம் இந்தியாவிடம் உருவாகியிருக்கிறது.

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சுமார் 5000 கி. மீ. இடைவெளி இருந்தாலும், அந்த இடைவெளியை சீனா தனது பணத்தைக் கொண்டு நிரப்புகிறது என்ற கருத்துப்பட புதுடெல்லி ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் இந்த மிகப் பெரிய நன்கொடை, இலங்கை எதிர்பாராதது. இதற்குப் பின்னால் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்ற குழப்பமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

அதேவேளை, மத்தல விவகாரத்தில் இந்தியாவும் குழப்பமான கருத்துக்களைத் தான் வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய கொடை அறிவிப்பு இந்தியாவுக்கு நிச்சயம் சவாலாகத் தான் இருக்கும்.

-ஹரிகரன்

Share.
Leave A Reply

Exit mobile version