ஐ.எஸ். தீவிரவாதிகள் என மிரட்டி குப்பிழான் வடக்கு கற்கரை கற்பக விநாயகர் கோயிலுக்கு அண்மையில் வயோதிபத் தம்பதியர் தனித்திருந்த வீடொன்றில் கொள்ளையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் என தம்மை அமையாளப்படுத்தி யன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை தாக்கிவிட்டு அங்கிருந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு தப்பிசென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,

வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை கண்டு தாம் கத்தியதாகவும் இதன்போது கொள்ளயைர்களில் ஒருவன் சத்தம் போட்டால் குண்டு வைப்போம் என மிரட்டினான் எனவும் தெரிவித்தனர்.

மேலும் கதவுக்கு போடப்பட்டிருந்த மரப்பலகையால் வயோதிபரை கொள்ளையர்களில் ஒருவன் பலமாக தாக்கினான். இதன்பின்னரும் குறித்த வயோதிபர் கத்தவே மற்றைய கொள்ளையன் கையால் வயோதிபரை தாக்கினான்.

பின்னர் வீட்டை சல்லடை போட்டு தேடிய போதும் வீட்டில் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் இருவரும் கறுப்பு துணியால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாக வீட்டில் இருந்தவர்கள் கூறினர். பாதிக்கப்பட்ட தம்பதியினர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களாவர்.

Share.
Leave A Reply

Exit mobile version