முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தனியார் ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.