உனக்காதான் ” ‘ஏ/சி போட்டிருக்கேன், உள்ளே போ’னு சொன்னப்போ, நடுங்கிட்டேன்!” – நடிகை ஷாலு ஷாமு
வே.கிருஷ்ணவேணி

‘விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கணும்னா, படுக்கைக்கு வா’ன்னு பிரபல இயக்குநர் சொன்னதாக ஷாலு ஷாமு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தச் செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஷாலு ஷாமுவைத் தொடர்புகொண்டு பேசினேன்.

பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். ‘தெகிடி’, ‘ஈட்டி’, ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

தவிர, சன் டி.வியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘சூப்பர் சிஸ்டர்ஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
index

”மீடூ பற்றி என் பதிலை இன்ஸ்டாகிராமில் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குதான் பதில் அளித்திருந்தேன். இப்போது ‘அந்த இயக்குநர் யார்’னு தொடர்ந்து கேட்கிறாங்க.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் படங்களில் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதனால்தான் அவர் பெயரை வெளியில் சொல்லத் தயங்குகிறேன்.

இந்தத் துறையில் இருக்கும் பெண்கள் இதைத் தாண்டித்தான் வந்திருப்பார்கள். வெளியில் சொல்வது மிகக்குறைந்த நபர்கள்தான். மீடூ வந்தபோது அதற்கான ஆதாரத்தைத்தான் கேட்டாங்க. என்னிடம் ஆதாரம் இருந்தாலும், அதை வெளியே சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

விஜய் தேவரகொண்டா படத்தின் முதல் அணுகுமுறையே எனக்கு அப்படித்தான் இருந்தது. நிறைய இயக்குநர்கள் அப்படிப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதனால், இதை பெருசா எடுத்துக்கல. யதார்த்தமா ஒருவர் கேட்டப்போ, இன்ஸ்டாகிராமில் அதுக்கு நான் சொன்ன பதில் வைரல் ஆகும்னு நான் நினைக்கல.

”என் மாமாவும் சினிமா துறையில்தான் காமெடி நடிகர் ஒருவருக்கு மேனேஜரா இருக்கார். நான் இதையெல்லாம் உடனே போன் பண்ணி அவர்கிட்ட சொன்னேன். மாமாவும் அந்த டைரக்டருக்குப் போன் பண்ணி, எவ்வளவு மோசமா திட்ட முடியுமோ அவ்வளவு மோசமா திட்டினார்”

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு வாய்ப்புத் தேடி வடபழனியில் அலையாத ஆபீஸ் இல்லை.

அப்போதிலிருந்தே இந்தப் பிரச்னைகள் எனக்கு இருந்தது. ‘இது என்ன பொழப்பு… சினிமாவே வேண்டாம்’னு விட்டு விலகிடலாம்னு நினைச்ச சமயத்துலதான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வாய்ப்பு வந்தது.

என்னதான் மீடூ பிரச்னை இவ்வளவு தூரம் பேசப்பட்டாலும் பிராக்டிகலா தீர்வு கிடைக்கிற விஷயம் கிடையாது. அதனால, பல பெண்கள் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பதை நானே நேரடியாகப் பார்த்திருக்கேன்” என்றவர், தொடர்ந்தார்.

தமிழில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்கு, ‘நீங்க ஆபீஸுக்கு வாங்க. பேசிக்கலாம்’னு சொன்னார் இயக்குநர். என் அனுபவத்துல அவர் என்ன தொணியில் பேசுகிறார்னு தெரிஞ்சதால, அவரை சந்திக்கவும் இல்லை; அந்த வாய்ப்பைத் தேடிப்போகவும் இல்லை.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்குக்கூட இப்போது போட்டி அதிகம். சில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்கும்போது, ஓகே சொன்னார்.

குடும்பத்தோடு தியேட்டருக்குப் போய் படம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. ‘உடனே கிளம்பி வாங்க. கதை டிஸ்கஸ் பண்ணணும்’னு சொன்னார்.

நானும் அவசர அவசரமா அவர் அலுவலகத்துக்குப் போனேன். அது ஒரு வீடு, அங்கே யாரும் இல்லை. ‘உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ’ன்னு அவர் சொன்னப்போ, கை கால் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. ஏதேதோ சொல்லி அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன்.

எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில். அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிக்கணும்னு ஆசை. 2010-ல் வெளியான ‘உன்னையே காதலிப்பேன்’ படம் எங்க அம்மா தயாரித்த படம்.

அது டிராப் ஆகிடுச்சு. அதனால நிறைய கடன் வந்தது. அப்போதான் அம்மா சொன்ன விஷயத்தைக் கேட்டு சினிமாவுக்கு வந்தேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படிச்சேன். படிச்சு முடிச்சதும் பட வாய்ப்பைத் தேடினேன்.

பெரிய இயக்குநர் ஒருவர், ‘உனக்கு ஒரு பெரிய கேரக்டர் கொடுக்கிறேன். சொல்றதைக் கேளு’னு சொன்னார். என் வாழ்க்கையில நான் ரொம்பப் பயந்தது அப்போதான்.

எங்க மாமா காமெடி நடிகர் ஒருவருக்கு மேனேஜரா இருக்கார். இதை உடனே போன் பண்ணி அவர்கிட்ட சொன்னேன். மாமாவும் அந்த இயக்குநருக்குப் போன் பண்ணி திட்டினார்.

அதிலிருந்தே நான் ரொம்பக் கவனமாதான் இருப்பேன். இப்போ எந்த வாய்ப்பையும் தேடிப்போறதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னால் மட்டும்தான், அந்தப் படத்தில் கமிட் ஆவேன்.

இதையெல்லாம் அம்மாகிட்ட சொன்னா, அவங்க வருத்தப்படுவாங்களேன்னு இப்போவரை சொன்னதில்லை. இந்தத் துறையில எதிர்த்துப் பேச ஆரம்பிச்ச பிறகு, என்னைக் காப்பாத்திக்க முடிஞ்சது.

ஆரம்பத்துல ஜாலியா பேசுறாங்கனுதான் நினைப்பேன். இப்போ அதுக்கெல்லாம் அர்த்தம் புரிய ஆரம்பிச்சிருக்கு” என்பவர், அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் பதில் சொல்கிறார்.

”நான் இன்ஸ்டாகிராமில் ஒரு லத்தின் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தேன். பலரும் அதைக் குடிச்சுட்டு ஆடுறதா நினைச்சுட்டாங்க. நான் குடிக்கல. அங்கே ஆடுனவங்கெல்லாம் டான்ஸர்ஸ். என்கூட ஆடுனவரும் ஒரு டான்ஸர்தான், பாய் ஃப்ரெண்ட் கிடையாது” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version