வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG-2033

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டிலிருந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் அவரை கண்டு பிடிக்காமையால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version