ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என சாட்சி கூறிய முன்னாள் மருத்துவ தாதி ராஜம்மாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.

‘காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்’ என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘பேக்காப்ஸ் நிறுவனம்’ ஒன்றில் ராகுல் காந்தி 2003-ஆம் ஆண்டு இயக்குநராகவும் செயலாளராகவும் இருந்து வருகிறார் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் ஜூன் 19-,1970-இல் பிறந்தவர் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜம்மா, ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்றும் அதற்கு தானே சாட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

f02

முக்கிய சாட்சி கேரளத்து பெண்ணான ராஜம்மா

கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மா (வயது 72). இவர் அப்போது டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சோனியா காந்தி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

“கடந்த 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் திகதி பிறந்த ராகுல் காந்தியை கையில் ஏந்தினேன்” என ராஜம்மா தெரிவித்திருந்தார். இதனால் “ராகுல் இந்தியாவில் பிறந்ததற்கு நானே சாட்சி” என அப்பெண் தெரிவித்திருந்தார்.

“49 வயதாகும் கியூட் பேபி காங்கிரஸ் தலைவராகவும் வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.

ராகுல் காந்தி வயநாட்டுக்கு அடுத்த முறை வரும் போது நான் அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்” என தேர்தலுக்கு முன்னதாக ராஜம்மாதெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வயநாடு எம்.பியான ராகுல் காந்தி அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சென்றார்.

அவர் நேற்று ராஜம்மாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.அன்று சிசுவாக இருந்த ராகுல் தற்போது 49 வயதான பெரியவனாக இருந்தது ராஜம்மாவுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.

ராஜம்மாவை சந்தித்த ராகுல் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.

இக்காட்சி பார்ப்போரை பரவசத்துக்கு உள்ளாக்கியது.இதுஇவ்விதமிருக்க, வயநாடு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் மற்றும் திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் சனிக்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் பல்​ேவறு பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அண்மையில் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினரையும் ராகுல்காந்தி சந்தித்தார்.

ராகுலின் வீதிப் பிரசாரத்தின்போது “நீங்கள் வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி மக்கள்அவரை திக்குமுக்காட வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version