ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஆராதனையில் கலந்துகொண்டனர்.